உடலியங்கியல்
மனித இரத்தம்:
இரத்தம் சிவப்பு நிறம் கொண்ட திரவ இணைப்புத் திசுவாகும்.
மேலும் இது மனிதனின் உடல் சுற்றோட்டத்தின் முக்கிய ஊடகமாகும்.
இரத்தத்தின் பகுதிப் பொருள்கள்
இரத்தம் இரண்டு முக்கிய பகுதிப்பொருட்களான பிளாஸ்மா எனும் திரவப்பகுதியையும் அதனுள் மிதக்கும் ஆக்கக் கூறுகளையும் (இரத்தசெல்கள்) கொண்டுள்ளது.
மொத்த இரத்தக் கொள்ளளவில் 55% பிளாஸ்மாவும், 45% ஆக்கத் துகள்களும் (இரத்த செல்கள்) உள்ளன.
70 கிலோ எடையுள்ள மனிதனில் உள்ள இரத்தத்தின் கொள்ளளவு ஏறத்தாழ 5000 மிலி (5லி) ஆகும்.
இரத்தத்தின் ஆக்கக் கூறுகள்
இரத்த அணுக்கள் மூன்று வகைப்படும்.
இரத்தச் சிவப்பணுக்கள் (RBC) (அ) எரித்ரோசைட்டுகள்
இரத்த வெள்ளையணுக்கள் (WBC) (அ) லியூக்கோசைட்டுகள்
இரத்தத் தட்டுக்கள் (platelets) (அ) திராம்போசைட்டுகள்
பிளாஸ்மா (Plasma)
பிளாஸ்மாவில், நீர் (80-92%) மற்றும் நீரில் கரைந்துள்ள பொருட்களான பிளாஸ்மா புரதங்கள், கனிமப் பொருள்கள் (0.9%) (Inorganic constituents), கரிமப்பொருள்கள் (0.1%) (Organic constituents) மற்றும் சுவாச வாயுக்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.
கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் நான்கு முக்கிய பிளாஸ்மா புரதங்களாவன
அல்புமின் (Albumin)
குளோபுலின் (Globulin)
புரோத்ராம்பின் (Prothrombin)
ஃபைப்ரினோஜன் (Fibrinogen) ஆகியவை.
அல்புமின் இரத்தத்தின் ஊடுகலப்பு அழுத்தத்தை (Osmotic pressure) நிர்வகிக்கிறது.
குளோபுலின், அயனிகள், ஹார்மோன்கள், கொழுப்பு ஆகியவற்றைக் கடத்துவதுடன் நோயெதிர்ப்புப் பணியிலும் உதவுகிறது.
மேலும் புரோத்ராம்பின் மற்றும் ஃபைப்ரினோஜன் ஆகிய இரண்டு பிளாஸ்மா புரதங்களும் இரத்தம் உறைதலில் (Blood clotting) பங்கேற்கின்றன.
யூரியா, அமினோ அமிலங்கள், குளுக்கோஸ் , கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் ஆகியன பிளாஸ்மாவில் உள்ள கரிமப் பொருட்களாகும்.
சோடியம் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடுகள், கார்பனேட்டுகள் மற்றும் பாஸ்பேட்டுகள் ஆகியன பிளாஸ்மாவில் உள்ள கனிமப்பொருட்களாகும்.
பிளாஸ்மாவின் பகுதிப் பொருள்கள் நிலையானவையல்ல.
உணவு உண்ட பிறகு, கல்லீரல் போர்ட்டல் சிரையில் குளுக்கோஸின் அளவு மிகவும் அதிகரிக்கிறது.
எனவே, கல்லீரல் இந்த உபரி அமினோ அமிலங்களைச் சிதைத்து யூரியாவை உற்பத்தி செய்கிறது.
கல்லீரல் போர்ட்டல் சிரை (Hepatic portal vein) மற்றும் கல்லீரல் தமனி (Hepatic artery) ஆகியவற்றில் உள்ள இரத்த யூரியாவைக் காட்டிலும் கல்லீரல் சிரையிலுள்ள (Hepatic vein) இரத்தம் அதிக அளவு யூரியாவைக் கொண்டுள்ளது.
இரத்த செல்கள்:
இரத்தச் சிவப்பணுக்கள் – எரித்ரோசைட்டுகள்
இவை மனித உடலில் அதிக அளவில் காணப்படக்கூடிய இரத்த செல்களாகும். இவை எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகின்றன.
சுவாச நிறமியான ஹீமோகுளோபினை RBC கொண்டுள்ளதால் இரத்தம் சிவப்பு நிறத்துடன் காணப்படுகிறது.
பாலூட்டிகளின் முதிர்ச்சி அடைந்த இரத்த சிவப்பணுவில், செல் நுண்ணுறுப்புகள் மற்றும் உட்கரு காணப்படுவதில்லை.
இவை இருபுறமும் குழிந்த தட்டு வடிவம் உடையவை. இவற்றின் வாழ்நாள் 120 நாட்கள் ஆகும்.
RBC ஆக்சிஜனை நுரையீரலிலிருந்து திசுக்களுக்கு கடத்துவதில் பங்கேற்கிறது.
இரத்த வெள்ளையணுக்கள் (WBC) லியூக்கோசைட்டுகள்
இவை நிறமற்றவை.
இவற்றில் ஹீமோகுளோபின் காணப்படுவதில்லை மற்றும் உட்கரு கொண்டவை.
இவை எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், தைமஸ் மற்றும் நிணநீர் முடிச்சு போன்றவற்றில் காணப்படுகின்றன.
இவை அமீபா போன்று நகரக் கூடியவை.
இரத்த வெள்ளையணுக்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
துகள்களுடைய செல்கள்
துகள்களற்ற செல்கள்
துகள்களுடைய செல்கள்
இவை சைட்டோபிளாசத்தில் துகள்களைக் கொண்டுள்ளன.
இவற்றின் உட்கருக்கள் ஒழுங்கற்றவை அல்லது கதுப்புக்களுடையவை.
மூன்று வகைப்படும்
நியூட்ரோஃபில்கள்
ஈசினோஃபில்கள்
பேசோஃபில்கள்
(i) நியூட்ரோஃபில்கள்
இவை அளவில் பெரியவை, இவற்றின் உட்கரு 2-7 கதுப்புகளை கொண்டுள்ளது.
மொத்த வெள்ளை அணுக்களில் 60% - 65% நியூட்ரோஃபில்கள் காணப்படுகின்றன.
நோய்த்தொற்று மற்றும் வீக்கத்தின் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
(ii) ஈசினோஃபில்கள்
இவற்றின் உட்கரு இரு கதுப்புகளைக் கொண்டது. மொத்த வெள்ளையணுக்களில் 2% - 3% வரை இவ்வகை செல்கள் உள்ளன.
உடலில் சில ஒட்டுண்ணித் தொற்று மற்றும் ஒவ்வாமை ஏற்படும் போது இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
நச்சுகளை அழித்தல் மற்றும் நச்சு முறிவினை ஏற்படுத்துவது ஈசினோஃபில்களின் முக்கிய பணிகளாகும்.
(iii) பேசோஃபில்கள்
பேசோஃபில்கள் கதுப்புடைய உட்கருவை கொண்டுள்ளன.
மொத்த வெள்ளையணுக்களில் 0.5% - 10% வரை இவ்வகை செல்கள் உள்ளன.
வீக்கங்கள் உண்டாகும் போது வேதிப்பொருள்களை வெளியேற்றுகின்றன.
துகள்களற்ற செல்கள்
இவற்றின் சைட்டோபிளாசத்தில் துகள்கள் காணப்படுவதில்லை. இவை இரண்டு வகைப்படும்.
லிம்ஃபோசைட்டுகள்
மோனோசைட்டுகள்
(i) லிம்ஃபோசைட்கள்
மொத்த வெள்ளையணுக்களில் இவை 20% - 25% உள்ளன.
வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுதலின் போது இவை எதிர்ப்பொருளை உருவாக்குகின்றன.
(ii) மோனோசைட்டுகள்
இவை லியூக்கோசைட்டுகளிலேயே மிகப்பெரியவை.
இவை அமீபாய்டு வடிவம் கொண்டவை. மொத்த வெள்ளையணுக்களில் 5-6% உள்ளது.
இவை விழுங்கு செல்களாதலால் பாக்டீரியாவை விழுங்குகின்றன.
இரத்த தட்டுகள் அல்லது திராம்போசைட்டுகள்
இரத்தத்தட்டுகள் திராம்போசைட்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை எலும்பு மஜ்ஜையிலுள்ள சிறப்பு செல்களான மெகாகேரியோசைட்டுகளால் (Megakaryocytes) உற்பத்தி செய்யப்படுகின்றன
இவை அளவில் சிறியவை மற்றும் நிறமற்றவை. இவற்றில் உட்கரு இல்லை.
இவற்றின் வாழ்நாள் 8-10 நாட்களாகும்.
மனிதனின் ஒரு கனமில்லிமீட்டர் இரத்தத்தில் 2,50,000 – 4,00,000 வரை இரத்தத் தட்டுக்கள் உள்ளன.
இவை இரத்தஉறைதலில் ஈடுபடும் பொருட்களைச் சுரக்கின்றன.
இவ்வணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் இரத்த உறைதல் கோளாறுகள் (Clotting disorders) ஏற்பட்டு உடலில் அதிகப்படியான இரத்த இழப்பு ஏற்படும்.
காயங்கள் ஏற்படும் பொழுது இரத்த உறைதலை ஏற்படுத்தி இரத்தப்போக்கை தடுக்கின்றன.
இரத்தத்தின் பணிகள்
சுவாச வாயுக்களைக் கடத்துகிறது (ஆக்சிஜன் மற்றும் CO2)
செரிமானம் அடைந்த உணவுப் பொருட்களை அனைத்து செல்களுக்கும் கடத்துகிறது.
ஹார்மோன்களைக் கடத்துகிறது.
நைட்ரஜன் கழிவுப்பொருட்களான, அம்மோனியா, யூரியா, யூரிக் அமிலம் போன்றவற்றைக் கடத்துகிறது.
நோய் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
உடலின் வெப்பநிலை மற்றும் pH-ஐ ஒழுங்குபடுத்தும் தாங்கு ஊடகமாக செயல்படுகிறது.
உடலின் நீர்ச் சமநிலையைப் பராமரிக்கிறது.
இரத்தம் உறைதல் (Coagulation of Blood)
ஒரு காயம்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியாவதைத் தடுக்கும் பொருட்டு இரத்தக் கட்டி (Blood clot) உருவாகி அதிகமான இரத்தப் போக்கை நிறுத்தும் நிகழ்வே இரத்தம் உறைதல் (Coagulation / clotting of blood) எனப்படுகிறது.
இரத்தக் குழாய்களிலுள்ள எண்டோதீலியம் சிதைவடைந்து அதன் சுவரிலுள்ள இணைப்புத் திசுக்களை இரத்தம் நனைக்கும் போது, இரத்த உறைதல் நிகழ்வு ஆரம்பமாகிறது.
இணைப்புத் திசுக்களிலுள்ள கொல்லாஜன் இழைகளுடன் இரத்த தட்டுகள் ஒட்டிக்கொண்டு இரத்த இழப்பைத் தடுக்கும் சில இரத்த உறைதல் பொருட்களை (காரணிகளை) வெளியிடுகின்றன.
இந்த இரத்த உறைதல் காரணிகள் (Blood clotting factors) பிளாஸ்மாவிலுள்ள இரத்த உறைதல் காரணிகளுடன் கலக்கின்றன.
செயல்படா நிலையிலுள்ள புரோத்ராம்பின் என்னும் புரதம், கால்சியம் அயனிகள் மற்றும் வைட்டமின் K ஆகியவற்றின் முன்னிலையில் செயல்படு திராம்பினாக மாற்றமடைகிறது.
திராம்பின், இரத்தப் பிளாஸ்மாவில் கரைந்த நிலையிலுள்ள ஃபைப்ரினோஜனை, கரையாத ஃபைப்ரின் இழைகளாக்குகின்றன.
இவ்விழைகள் ஒன்றுக்கொன்று இணைந்து இரத்தச் செல்களைச் சூழ்ந்து ஒரு வலைப்பின்னல் அமைப்பை உண்டாக்குகிறது.மேலும் ஃபைப்ரின் வலைப்பின்னல் காயம்பட்ட இரத்தக் குழலில் குணமாகும் வரை அடைப்பை ஏற்படுத்தி இரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஃபைப்ரினில் உள்ள நுண்ணிழைகள் சுருங்கி வெளிர் மஞ்சள்நிறச் சீரம் எனும் திரவத்தை வலைப்பின்னல் வழியே வெளியேற்றுகின்றது. (சீரம் (Serum) என்பது ஃபைப்ரினோஜன் இல்லாத பிளாஸ்மாவாகும்).
இரத்த உறைதலைத் தடைசெய்யும் இரத்த உறைவு எதிர்ப்பொருளான (Anticoagulant) ஹிப்பாரின், இணைப்புத் திசுக்களிலுள்ள மாஸ்ட் செல்களினால் உருவாக்கப்படுகிறது. இது சிறிய இரத்தக் குழாய்களில் இரத்த உறைதலைத் தடைசெய்கிறது.
இரத்த வகைகள்
காரல் லேண்ட்ஸ்டீனர் (1900) இரத்த வகைகளைக் கண்டறிந்தார். இவர் A, B மற்றும் O இரத்தவகைகளை அடையாளம் கண்டறிந்தார்.
டிகாஸ்டிலோ மற்றும் ஸ்டய்னி (1902) AB இரத்தவகையினை கண்டறிந்தனர்.
மனித இரத்தத்தில் சில தனிச் சிறப்பு வாய்ந்த அக்ளுட்டினோஜென் அல்லது ஆன்டிஜென் (Ag) மற்றும் அக்ளுட்டினின் (அ) எதிர்ப்பொருள்கள் (ஆன்ட்டிபாடிகள்) காணப்படுகின்றன.
ஆன்டிஜென்கள் RBC-யின் மேற்புற படலத்தில் காணப்படுகின்றன.
எதிர்ப்பொருட்கள் இரத்த பிளாஸ்மாவில் காணப்படுகின்றன.
ஆன்டிஜென் மற்றும் (ஆன்டிபாடி) எதிர்ப்பொருள்கள் காணப்படுவதின் அடிப்படையில் மனித இரத்தத்தினை A, B, AB மற்றும் O என நான்கு வகைககளாக அறியலாம்.
இந்த நான்கு வகைகளில் ஏதேனும் ஒரு வகையினை ஒரு தனிநபர் பெற்றிருப்பார்.
‘A’ வகை: ஆன்டிஜென் A–RBC யின் மேற்புறப்பரப்பில் காணப்படும். ஆன்டிபாடி B – இரத்த பிளாஸ்மாவில் காணப்படும்.
’B’ வகை: ஆன்டிஜென் B–RBC யின் மேற்புறப்பரப்பில் காணப்படும். ஆன்டிபாடி A – இரத்த பிளாஸ்மாவில் காணப்படும்.
‘A B’ வகை: ஆன்டிஜென் A மற்றும் B–RBC யின் மேற்புறப்பரப்பில் காணப்படும். அதற்கான ஆன்டிபாடிகள் பிளாஸ்மாவில் காணப்படாது.
’O’ வகை: ஆன்டிஜென் A மற்றும் B-RBC யின் மேற்புறப்பரப்பில் காணப்படாது. இருந்த போதிலும் அதற்கான ஆன்டிபாடி A மற்றும் B பிளாஸ்மாவில் காணப்படும்.
இரத்தம் வழங்குதல்
இரத்தம் செலுத்துவதற்கு முன்னர் இரத்தம் வழங்குபவர் மற்றும் இரத்தம் பெறுபவருக்கு இடையில் ஆன்டிஜெனுக்கும் ஆன்டிபாடிக்கும் உள்ள பொருத்தத்தினை கருத்தில் கொள்ளவேண்டும்.
பொருத்தமில்லா ஒரு இரத்த வகையினை ஒருவர் பெறுவதினால் அவருக்கு இரத்தத் திரட்சி ஏற்பட்டு இறக்க நேரிடும்.
AB இரத்த வகை கொண்ட நபரை அனைவரிடமிருந்து இரத்தம் பெறுவோர் வகை என அழைப்பர். இவர் அனைத்து இரத்த வகையினையும் ஏற்றுக்கொள்வார்.
O இரத்தவகை கொண்டநபரை ‘இரத்தக் கொடையாளி‘ என அழைப்பர். இவர் அனைத்து வகை இரத்த பிரிவினருக்கும் இரத்தம் வழங்குவார்.
Rh காரணி
Rh காரணி (D antigen) எனும் மற்றுமொரு புரதம் இரத்தச் சிவப்பணுக்களின் மேற்பரப்பில் பெரும்பாலான மனிதர்களில் (80%) காணப்படுகிறது.
இது ரீசஸ் குரங்கின் (Rhesus monkey) இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள புரதத்தை ஒத்துக் காணப்படுவதால் இவை Rh காரணி எனப் பெயரிடப்பட்டது.
இரத்தச் சிவப்பணுக்களின் மேற்பரப்பில் இந்த D ஆன்டிஜன் காணப்பட்டால் அவர்கள் Rh+ (Rh உடையோர்) மனிதர்கள் எனவும் D ஆன்டிஜன் அற்றவர்கள் Rh- (Rh அற்றோர்) மனிதர்கள் எனவும் கருதப்படுவர்.
ஒருவருக்கு இரத்தம் செலுத்தும் முன்பு இந்த Rh காரணி பொருத்தத்தையும் (Compatibility) பரிசோதிக்க வேண்டும்.
ஒரு Rh-தாய், Rh+ கருவைச் சுமக்கும் போது திசுப்பொருந்தாநிலை (Incompatibility – mismatch) ஏற்படுகிறது.
எனவே கருவானது இறக்க நேரிடுகிறது. இரத்த சோகை (Anaemia) மற்றும்
மஞ்சள் காமாலை (Jaundice) போன்ற குறைபாடுகளால் அக்கரு பாதிக்கப்படுகிறது.
கருவின் இரத்தச் சிவப்பணுக்கள் சிதைந்து அதன் எண்ணிக்கை குறைவது
இதற்குக் காரணமாகும்.
இந்நிலைக்கு எரித்ரோபிளாஸ்டோஸிஸ் ஃபீடாலிஸ் (erythroblastosis foetalis) என்று பெயர்.
இந்நிலையைத் தவிர்க்க முதல் பிரசவத்திற்குப் பின் உடனடியாக Rh நெகட்டிவ்தாய்க்கு (Anti D Antbodies) D ஆன்டிபாடிக்கான எதிர்வினைப் பொருளான ரோக்கம் (Rhocum) என்னும் மருந்தை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும்.
இரத்தக்குழாய்கள்:
இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
அவை,
தமனிகள்,
சிரைகள் மற்றும்
இரத்த நுண்நாளங்கள் ஆகும்.
இரத்த குழாயில் உள்ளீடற்ற அமைப்பும் அதைச்சுற்றி சிக்கலான சுவர்ப்பகுதியும் உள்ளன.
மனிதனின் இரத்தக்குழாயின் சுவர்ப்பகுதி தெளிவான மூன்று அடுக்குகளாலானது. அவை
டியூனிக்கா இன்டீமா (உள்ளடுக்கு)
டியூனிகா மீடியா (நடு அடுக்கு) மற்றும்
டியூனிகா எக்ஸ்டர்னா (வெளியடுக்கு) ஆகும்.
தமனிகள் (Arteries)
இதயத்திலிருந்து இரத்தத்தை வெளியே எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களுக்குத் தமனிகள் என்று பெயர்.
தமனிகள் உடலின் ஆழ்பகுதியில் அமைந்துள்ளன.
தமனிகளின் சுவர்கள் அதிக அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ளும் வகையில்
தடித்தும், எளிதில் சிதையா வண்ணமும் காணப்படும்.
நுரையீரல் தமனியைத் தவிர, மற்ற தமனிகள் அனைத்தும் ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன.
இதயத்திலிருந்து இரத்தத்தை மற்ற உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய பெரிய தமனி, பெருந்தமனி அல்லது அயோர்ட்டா (Aorta) எனப்படும்.
இரத்த நுண் நாளங்கள் (Capillaries)
இரத்த நுண் நாளப்படுகைகள் (Capillary beds) மெல்லிய இரத்த நுண்நாளங்களால் ஆன வலைப்பின்னல் அமைப்பால் ஆக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றின் சுவர்கள் மெல்லிய, ஒற்றை அடுக்கால் ஆன தட்டை எபிதிலீயச் செல்களை (Squamous epithelium) கொண்டவை.
இரத்த நுண்நாளப்படுகைகள் இரத்தத்திற்கும் திசுக்களுக்கும் இடையே பொருட்களைப் பரிமாறிக் கொள்ளும் தளங்களாகச் செயல்படுகின்றன.
அவற்றின் சுவர்கள் அரைச்சந்திர வால்வுகளால் பாதுகாக்கப்படுகின்றன.
இரத்த நுண்நாளங்களில் கலப்பு இரத்தம் (ஆக்ஸிஜன் நிரைந்த மற்றும் ஆக்ஸிஜனற்ற) காணப்படுகின்றது.
சிரைகள் (Veins)
மெல்லிய சுவரால் ஆன, அதிக உள்ளீடற்ற உட்பகுதியைக் கொண்ட இரத்த நாளங்களே சிரைகளாகும். எனவே இவை எளிதில் நீளும் தன்மையுடையவை.
இவற்றில் நுரையீரல் சிரையைத் தவிரப் பிற சிரைகளனைத்தும் உடலின் பல பகுதிகளிலிருந்தும் ஆக்ஸிஜனற்ற இரத்தத்தை இதயத்திற்கு எடுத்து வருபவையாகும்
சிரைகளினுள் உள்ள அரைச்சந்திர வால்வுகள் இரத்த ஓட்டத்தை ஒரே திசையில் செலுத்த உதவுகிறது. மேலும் இவ்வால்வுகள் இரத்தம் பின்னோக்கிப் பாய்வதையும் (Back flow) தடுக்கின்றன.
இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதால் இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை.
மனித இதயம்
மனித இதயத்தின் அமைப்பு:
இரத்த நாளங்கள் வழியாக இரத்தத்தை உந்தித்தள்ளும் தசையால் ஆன விசையியக்க உறுப்பு இதயம் ஆகும்.
மனித இதயம் நுரையீரலுக்கு இடையில், மார்புக்குழியில், தரவிதானத்திற்கு மேலாகசற்று இடது புறம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.
இதயம் கார்டியாக் தசை எனும் சிறப்புத்தசையால் ஆனது.
இதயம் இரண்டு அடுக்கினால் ஆன பெரிகார்டியல் உறையால் சூழப்பட்டுள்ளது.
இவ்வடுக்கின் இடைவெளியில் நிரம்பியுள்ள பெரிகார்டியல் திரவம் இதய துடிப்பின் போது ஏற்படும் உராய்வு மற்றும் இயக்கத்தினால் ஏற்படும் காயங்களில் இருந்து பாதுகாக்கும் உயவுப் பொருளாக உள்ளது.
மனித இதயம் நான்கு அறைகளைக்கொண்டது.
ஆரிக்கிள்கள் (அ) ஏட்ரியங்கள் - மெல்லிய தசையாலான மேல்அறைகள்.
வெண்ட்ரிக்கிள்கள் - தடித்த தசையாலான கீழ் அறைகள்.
இவ்வறைகளைப் பிரிக்கின்ற இடைச்சுவர் ‘செப்டம்‘ எனப்படும்.
இடைச் சுவரினால், ஆக்சிஜன் மிகுந்த மற்றும் ஆக்சிஜன் குறைந்த இரத்தம் ஒன்றுடன் ஒன்று கலவாமல் தடுக்கப்படுகிறது.
இரண்டு ஆரிக்கிள்களும், ஆரிக்குலார் இடைத்தடுப்பு சுவரினால் பிரிக்கப்பட்டுள்ளன.
வலது ஆரிக்கிளை விட இடது ஆரிக்கிள் சிறியது.
உடலின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தினை முக்கிய சிரைகளான மேற்பெருஞ்சிரை, கீழ்பெருஞ்சிரை மற்றும் கரோனரி சைனஸ் மூலம் வலது ஆரிக்கிள் பெறுகிறது.
நுரையீரலிலிருந்து ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை நுரையீரல் சிரைகளின் மூலம் இடது ஆரிக்கிள் பெறுகின்றது.
வலது மற்றும் இடது ஆரிக்கிள்கள் முறையே வலது மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்களுக்கு இரத்தத்தினை (உந்தித் தள்ளுகின்றன) செலுத்துகின்றன.
இதயத்தின் கீழ் அறைகள் வெண்ட்ரிக்கிள்கள் எனப்படும்.
வலது மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்கள், இடை வெண்ட்ரிக்குலார் தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.
இதயத்திலிருந்து அதிக விசையுடன் இரத்தத்தை உந்தி செலுத்துவதால் வலது, இடது வெண்ட்ரிக்கிளின் சுவர்கள் தடித்து காணப்படுகின்றன.
வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து உருவான நுரையீரல் பொதுத்தமனி, வலது மற்றும் இடது நுரையீரல் தமனிகளாகப் பிரிவடைகிறது.
வலது மற்றும் இடது நுரையீரல் தமனிகள் முறையே வலது, இடது நுரையீரலுக்கு ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை செலுத்துகின்றன.
இடது வெண்ட்ரிக்கிளானது வலது வெண்ட்ரிக்கிளை விட சற்று பெரியதாகவும், சிறிது குறுகலாகவும் அமைந்துள்ளது.
இதனுடைய சுவர் வலது வெண்ட்ரிக்கிளை விட மூன்று மடங்கு தடிமனானது. இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து பெருந்தமனி தோன்றுகிறது.
உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை பெருந்தமனி அளிக்கின்றது.
கரோனரி தமனி இதயத்தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கிறது.
இதய அறைகளின் பணிகள்:
வென்ட்ரிக்குலார் டயஸ்டோல் (Ventricular diastole) [படிநிலை -1]
ஆரிக்கிள் அழுத்தம் வென்ட்ரிக்கிள் அழுத்தத்தை விட உயர்கின்றது.
இந்நிலையில் ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகள் திறக்கின்றன. அரைச்சந்திர வால்வுகள் மூடுகின்றன
இரத்தம் ஆரிக்கிள்களில் இருந்து வென்ட்ரிக்கிள்களுக்குள் இயல்பாகச் செல்கின்றது.
ஆரிக்குலார் சிஸ்டோல் (Atrial systole) [படிநிலை -2]
இந்நிலையில் ஆரிக்கிள்கள் சுருங்குகின்றன.
வென்ட்ரிக்கிள்கள் தொடர்ந்து தளர்ந்த நிலையிலேயே உள்ளன ஆரிக்கிள்கள் சுருங்கி டையஸ்டோலிக் முடிவு கொள்ளளவை (End diastolic volume-EDV) எட்டும் வரை, அதிக அளவு இரத்தம் வென்ட்ரிக்கிளை நோக்கி உந்தித்தள்ளப்படுகின்றது.
டையஸ்டோலிக் முடிவு கொள்ளளவு இதயத் தசை நார்களின் நீளத்தைப் பொறுத்தது.
தசை நீட்சி அதிகரித்தால் EDV யும் வீச்சுக் கொள்ளளவும் உயர்கின்றது.
வென்ட்ரிக்குலார் சிஸ்டோல் [படிநிலை -3]
ஒத்தக் கொள்ளளவு சுருக்கம் – Isovolumetric contraction. வென்ட்டிரிக்கிளின் சுருக்கம் ஆரிக்குலோ வென்ட்ரிக்குலார் வால்வுகளை மூடச் செய்து வென்ட்ரிகுலார் அழுத்தத்தை அதிகரிக்கின்றது.
வென்ட்ரிக்கிள் சுவரின் தசை நார்களின் நீளம் மற்றும் வென்டிரிக்கிளின் கொள்ளளவு மாறாமல் இரத்தம் பெருந்தமனிக்குள் செலுத்தப்படுகின்றது.
வென்ட்ரிக்குலார் சிஸ்டோல் [படிநிலை -4]
வென்ட்ரிகுலார் வெளியேற்றம் -Ventricular ejection. வென்ட்ரிக்கிளின் அழுத்தம் அதிகரிப்பதால் அரைச்சந்திர வால்வுகள் திறக்கின்றன.
இரத்தம் பின்னோக்கிச் செல்வது தடுக்கப்பட்டுப் பெருந்தமனி மற்றும் நுரையீரல் தமனிகளுக்குள் செலுத்தப்படுகிறது.
இந்நிலை சிஸ்டோலிக் முடிவுக் கொள்ளளவு (ESV) எனப்படும்.
வென்ட்ரிக்குலார் டயஸ்டோல் (Ventricular diastole) [படிநிலை -5]
இந்நிலையில் வென்ட்ரிக்கிள்கள் விரிவடையத் தொடங்குகின்றன. தமனிகளின் இரத்த அழுத்தம் வென்ட்ரிக்கிளின் அழுத்தத்தை விட உயர்கின்றன.
இதனால் அரைச்சந்திர வால்வுகள் மூடுகின்றன. இதயம் படிநிலை 1ன் நிலையை மீண்டும் அடைகிறது.
வால்வுகள்
இதய வால்வுகள் தசையால் ஆன சிறு மடிப்புகள் ஆகும். இவை இரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்துவதற்கு உதவுகின்றன. இரத்தமானது ஒரே திசையில் செல்வதையும் மற்றும் பின்னோக்கி வருவதைதடுக்கவும் உதவுகிறது.
இதயம் மூன்று விதமான வால்வுகளைக் கொண்டது.
வலது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு
இது வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
முக்கோண வடிவிலான மூன்று மெல்லிய இதழ் தசை மடிப்புகளால் ஆனதால் இது மூவிதழ் வால்வு என்று அழைக்கப்படுகிறது.
வால்வின் இதழ் முனைகள் கார்டா டென்டினே என்ற தசை நீட்சிகளால் வெண்ட்ரிக்கிளின் பாப்பில்லரித் தசைகளோடு பொருத்தப்பட்டுள்ளன.
இடது ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் வால்வு
இது இடது ஆரிக்கிள் மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
இது இரண்டு கதுப்பு போல அமைந்துள்ளதால், ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு என்றும் அழைக்கப்படுகிறது.
அரைச்சந்திர வால்வுகள்
இதயத்திலிருந்து வெளியேறும் முக்கியத் தமனிகளில் (பெருந்தமனி, நுரையீரல் தமனி) உள்ள அரைச்சந்திர வால்வுகள் வெண்ட்ரிக்கிளுக்குள் இரத்தம் பின்னோக்கி செல்வதைத் தடுக்கின்றன.
அவை நுரையீரல் மற்றும் பெருந்தமனி அரைச்சந்திர வால்வுகள் எனப்படுகின்றன
இதய ஒலிகள்
இதய ஒலியானது இதய வால்வுகள் சீரான முறையில் திறந்து மூடுவதால் ஏற்படுகிறது.
முதல் ஒலியான ‘லப்’ நீண்டநே ரத்திற்கு ஒலிக்கும் (0.16 – 0.9 நொடிகள்). வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் ஆரம்ப நிலையில் மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடுவதால் இந்த ஒலி உண்டாகிறது.
இரண்டாவது ஒலியான ‘டப்’ சற்று குறுகிய காலமே ஒலிக்கும் (0.9 நொடிகள்). இவ்வொலியானது வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் முடிவில் அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் ஏற்படும்.
இதயத் துடிப்பு
இதயத்தின் ஆரிக்கிள்கள் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் முழுமையாக ஒருமுறை சுருங்கி (சிஸ்டோல்) விரிவடையும் ( டையஸ்டோல்) நிகழ்விற்கு இதயத்துடிப்பு என்று பெயர்.
இதயமானது சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 – 75 முறை துடிக்கிறது.
மனித இதயம் மயோஜெனிக் வகையைச் சேர்ந்தது. இதயத்தசையில் காணப்படும் சிறப்புப் பகுதியான சைனோ ஏட்ரியல் கணு (SA) இதயம் சுருங்குவதைத் துவக்குகிறது. இது வலது ஏட்ரிய சுவரில் உள்ள மேற்பெருஞ்சிரைத் துளையின் அருகில் காணப்படுகிறது
SA கணுவானது மேற்புறம் அகன்றும் கீழ்புறம் குறுகியும் காணப்படுகிறது. இது மெல்லிய தசை நாரிழைகளால் ஆனது.
SA கணுவானது இதயத்தின் பேஸ்மேக்கராக செயல்படுகிறது
ஏனெனில் இது இதயத் துடிப்புகளுக்கான மின் தூண்டலைத் தோற்றுவித்து இதயத் தசைகளின் சுருக்கத்தைத் தூண்டுகிறது.
சைனோ ஏட்ரியல் கணுவிலிருந்து தூண்டல்கள் அலைகளாகப் பரவி வலது மற்றும் இடது ஏட்ரிய சுவர்களை சுருங்கச் செய்வதன் மூலம் இரத்தம் ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் திறப்பின் வழியாக வெண்ட்ரிக்கிள்களுக்கு உந்தித்தள்ளப்படுகிறது.
SA கணுவிலிருந்து மின்தூண்டல் அலைகள் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் (AV) கணுவிற்கு பரவுகிறது.
ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றை மற்றும் புர்கின்ஜி கற்றைகள் வழி வெண்ட்ரிக்கிள்களுக்கு மின்தூண்டல் அலைகள் பரவி அவற்றை சுருங்கச் செய்கிறது.
விலங்குகளும் – இதய அறைகளும்:
அனைத்து முதுகெலும்புள்ள உயிரிகளிலும் தசையாலான, அறைகளைக் கொண்ட இதயம் காணப்படுகிறது.
8 இணை பக்கவாட்டு இதயம் – மண்புழு
2 இதய அறைகள் – மீன்கள்
3 இதய அறைகள் – ஊர்வன
4 இதய அறைகள் – பறவைகள், பாலூட்டிகள்,முதலை
இதய நோய்கள்:
மிகை இரத்த அழுத்தம் (Hypertension):
மிகை இரத்த அழுத்தம் (Hypertension): இது மனிதர்களிடையே அதிகம் காணப்படும் நோயாகும். உடல் நலமுடைய ஒருவரின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரசம் ஆகும்.
சிஸ்டாலிக் அழுத்தம் 150மி.மீ பாதரசத்தை விட அதிகமாகவும் டயஸ்டாலிக் அழுத்தம் 90 மி.மீ பாதரசத்தை விட அதிகமாகவும் நிலையாக இருப்பது மிகை இரத்த அழுத்தம் எனப்படுகிறது
கட்டுப்படுத்த இயலாத நாள்பட்ட மிகை இரத்த அழுத்தம், இதயம், மூளை மற்றும் சிறுநீரகங்களைப் பாதிக்கிறது
இதயத்தசை தமனி நோய் (Coronary heart disease)
இக்குறைபாட்டில் இதயத் தமனிகளின் உட்புறம், படிவுகள் (atheroma)
தோன்றி இரத்தக்குழல்கள் குறுகலடையும்.
கொலஸ்ட்ரால், நார் பொருள்கள், இறந்த தசைச்செல்கள் மற்றும் இரத்தப் பிலேட்லெட்டுகள் (இரத்த தட்டுகள்) போன்றவைகளைக் கொண்ட அதிரோமா உருவாகுதல் அதிரோஸ்கிலெரோசிஸ் எனப்படும் (Atherosclerosis).
அதிகக் கொழுப்புப் பொருட்களால் ஆன அதிரோமா தமனிகளின் உட்புறச்சுவரில் பற்றுப் படிவுகள் (Plaque) தமனிகளின் மீள்தன்மையைக் குறைத்து இரத்த பாய்வையும் குறைக்கிறது.
இப்பற்றுப்படிவுகள் பெரிதாகி இதய இரத்தக் குழாய்களுக்குள் இரத்த உறைவுக் கட்டிகளை உருவாக்கலாம்.
இதற்கு கரோனரி திராம்பஸ் (Coronary thrombus) என்று பெயர். இது மாரடைப்பை (Heart attack) ஏற்படுத்துகிறது.
மார்பு முடக்கு வலி (Angina pectoris) (குருதித் தடையால் இதயத்தசையில் ஏற்படும் வலி)
இதயத்தசை தமனி நோயின் தொடக்க நிலைகளில் நோயாளிகள் இவ்வலியை உணருவார்கள்.
அதிரோமா கரோனரி தமனிகளை ஓரளவுக்கு அடைப்பதால் இதயத்திற்குச்
செல்லும் இரத்த அளவு குறைகிறது. இதனால் மார்பில் ஒரு
இறுக்கம் அல்லது திணறல் ஏற்பட்டு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இது கடுமையான மார்பு வலியை (Angina) ஏற்படுத்துகிறது
இவ்வலியானது சிறிது நேரம் வரை நீடிக்கிறது.
இதயச்செயலிழப்பு அல்லது இதயத்தசை நசிவுறல் நோய் (Heart failure or Myocardial infarction)
இந்நிலை இதயத்தசை சுருங்குதலில் ஏற்படும் குறைபாட்டால் தோன்றுகின்றது.
இதில் ஃப்ராங்க்– ஸ்டார்லிங் விளைவு இயல்பான இறுதி டயஸ்டோலிக் கொள்ளளவில் இருந்து கீழ் நோக்கிச் செல்ல வலதுபுறம் மாறுகின்றது. செயலிழக்கும் இதயம், குறைந்த அளவு வீச்சுக் கொள்ளளவை வெளியேற்றுகிறது. இதனால், இதயத்தசைகளுக்குச் செல்லும் தமனிக் குழல்களில் செல்லும் இரத்த ஓட்டம் குறிப்பிடத் தகுந்த அளவில் குறைந்து விடுவதால் இதயத்தசையிழைகள் இறக்கின்றன.
இந்நிலைக்கு மாரடைப்பு அல்லது இதயத்தசை நசிவுறல் நோய் (Myocardial infarction) என்று பெயர்.
ருமாட்டிக் இதயநோய் (Rheumatoid Heart Disease):
ருமாட்டிக் காய்ச்சல் ஒரு சுயத் தடைக்காப்பு குறைபாட்டு நோயாகும். ஒருவரின் தொண்டைப்பகுதியில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியங்கள்
தாக்குவதால் இந்நோய் தோன்றுகிறது. தொற்று ஏற்பட்ட 2 முதல் 4 வாரங்களில் ருமாட்டிக் காய்ச்சல் ஏற்படுகிறது.
இத்தொற்றுக்கு எதிராகத் தோன்றும் நோய் எதிர்வினைப்பொருள், இதயத்தைப் பாதிக்கின்றது.
நோய்கண்டறிதலும் அதற்கான சிகிச்சை முறையும் (Diagnosis and treatment)
ஆஞ்சியோகிராம்.
இதய தமனிகளில் உள்ள சுருக்கங்கள் மற்றும் அடைப்புகளைக் கண்டறியப் பயன்படும் ஒரு சிறப்பு வகை X ray ஆகும்.
கரோனரி ஆஞ்சியோகிராபி:
சாதாரன Xray வால் கண்டறிய இயலாத இதய தமனிகளின் அடைப்புகளை கண்டறியும் முறையாகம்.
இதில் சிறப்பு வகை சாயம் X கதிர் உள்ளே செலுத்தப்படுகிறது.
கரோனரி ஆஞ்சியோபிளாஸ்ட்டி:
இந்த முறையில் ஒரு பலூன் வழிகுழாய்(stent) உட்செலுத்தப்பட்டு அடைப்பு சரிசெய்யப்படுகிறது.
மனித நாளமில்லாச் சுரப்பி மண்டலம்
விலங்கினங்களில் நாளமுள்ள சுரப்பிகள் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகள் என இருவகையான சுரப்பிகள் காணப்படுகின்றன.
தாமஸ் அடிசன் என்பவர் “நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் தந்தை “ எனக் குறிப்பிடப்படுகிறார்
இங்கிலாந்து நாட்டு உடற்செயலியல் W.H.பேய்லிஸ் மற்றும் E.H ஸ்டார்லிங் ஆகியோர் “ஹார்மோன்” என்ற சொல்லை முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினர்.
அவர்கள் முதன் முதலில் கண்டறிந்த ஹார்மோன் “செக்ரிடின்” ஆகும்.
நாளமில்லாச் சுரப்பி மண்டலம் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பற்றிய உயிரியல் பிரிவு “ என்டோகிரைனாலஜி ” எனப்படும்.
நாளங்கள் இல்லாததால் நாளமில்லாச் சுரப்பிகள் என அழைக்கப்படுகின்றன
இவற்றின் சுரப்புகள் ஹார்மோன்கள் என அழைக்கப்படுகின்றன.
குறைவான அளவு சுரக்கும் இவைகள் இரத்தத்தில் பரவுவதன் மூலம் உடலின் தொலைதூர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
இவை குறிப்பிட்ட உறுப்புகளில் செயல்படுகின்றன.
இத்தகைய உறுப்புகள் இலக்கு உறுப்புகள் என குறிப்பிடப்படுகின்றன
ஹார்மோன்கள் நமது உடலில் கரிம வினையூக்கிகளாகவும் துணை நொதிகளாகவும் செயல்பட்டு இலக்கு உறுப்புகளில் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்வதால் இவை வேதித்தூதுவர்கள் (Chemical messengers) எனப்படுகின்றன.
ஹார்மோன்களின் குறை உற்பத்தி மற்றும் மிகை உற்பத்தி உடலில் பல
கோளாறுகளைத் தோற்றுவிக்கின்றன.
ஹார்மோன்கள் உடலமைப்பு, உடற்செயலியல், மனநிலை செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உடல் சமநிலையைப் பேணுகின்றன (Homeostasis).
ஹார்மோன்களில் நீரில் கரையும் தன்மை கொண்ட புரதங்கள்
அல்லது பெப்டைடுகள் அல்லது அமைன்கள் மற்றும் கொழுப்பில் கரையும் ஸ்டீராய்டுகள் போன்றவை உள்ளன .
நாளமுள்ள சுரப்பிகள் சுரக்கும் பொருளினை எடுத்துச் செல்ல நாளங்கள் உள்ளன. (எ. கா.) உமிழ் நீர்சுரப்பிகள், பால்சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள்.
பாரா தைராய்டு, பீனியல், அட்ரினல், தைமஸ் போன்றன முழுமையான நாளமில்லாச் சுரப்பிகள் (Exclusive endocrine glands) ஆகும்.
ஹைபோதலாமஸ் நரம்பு மண்டலப் பணிகளுடன் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்வதால் நரம்புசார் நாளமில்லாச் சுரப்பி (Neuro endocrione glands) என்று பெயர் பெறுகின்றது.
கூடுதலாக கணையம், குடல்பாதை எபிதீலியம், சிறுநீரகம், இதயம்,
இனச்செல் சுரப்பிகள் (Gonads) மற்றும் தாய்சேய் இணைப்புத்திசு (Placenta) ஆகிய உறுப்புகளும் நாளமில்லாச் சுரப்பித் திசுக்களையும் கொண்டுள்ளதால், இவை, பகுதி நாளமில்லாச் சுரப்பிகள் (Partial endocrine glands) எனப்படுகின்றன.
நாளமுள்ள சுரப்பிகள் சுரக்கும் பொருளினை எடுத்துச் செல்ல நாளங்கள் உள்ளன. (எ. கா.) உமிழ்நீர் சுரப்பிகள், பால் சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள்.
மனிதரிலும் பிற முதுகெலும்பிகளிலும் காணப்படும் நாளமில்லாச் சுரப்பிகள்:
பிட்யூட்டரி சுரப்பி
தைராய்டு சுரப்பி
பாராதைராய்டு சுரப்பி
கணையம் (லாங்கர்ஹான் திட்டுகள்)
அட்ரினல் சுரப்பி (கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா)
இனப்பெருக்க சுரப்பிகள் (விந்தகம் மற்றும் அண்டச் சுரப்பி)
தைமஸ் சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி அல்லது ஹைப்போபைஸிஸ் பட்டாணி வடிவிலான திரட்சியான செல்களின் தொகுப்பாகும். நீள்கோள வடிவ பிட்யூட்டரி சுரப்பி மூளையின் அடிப்பகுதியில் காணப்படும் ஸ்பீனாய்ட் எலும்பில் உள்ள செல்லா டர்சிகா (Sella turcica) என்னும் குழியில் அமைந்துள்ளது. இது இன்ஃபன்டிபுலம் எனும் சிறிய காம்பு போன்ற அமைப்பால் மூளையின் ஹைபோதலாமஸ் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
முன்புற கதுப்பு அடினோ ஹைப்போபைசிஸ் எனவும் பின்புற கதுப்பு நியூரோ ஹைப்போபைசிஸ் எனவும் அழைக்கப்படுகின்றது.
கரு வளர்ச்சியின் போது, தொண்டைக்குழி எபிதீலியத்தின் உட்குழிவடைந்த பகுதியான ராத்கேயின் பையிலிருந்து (Rathke’s pouch) முன்கதுப்பும், மூளையின் அடிப்பகுதியில் இருந்து ஹைபோதலாமஸின் வெளிநீட்சியாக பின்கதுப்பும் தோன்றுகின்றன.
உள்ளமைப்பியல் அடிப்படையில் முன்கதுப்பு பார்ஸ் இன்டர் மீடியா (Pars intermedia), பார்ஸ் டிஸ்டாலிஸ் (Pars distalis) மற்றும் பார்ஸ் டியூபராலிஸ் (Pars tuberalis) என்ற மூன்று பகுதிகளை கொண்டுள்ளது.
பின்கதுப்பு பார்ஸ் நெர்வோசா (Pars nervosa) என்ற பகுதியால் ஆனது. இது பிறநாளமில்லாச் கட்டுப்படுத்துவதால் “தலைமை சுரப்பி” என்றும் அழைக்கப்படுகிறது.
பிட்யூட்டரியின் முன்கதுப்பு (அடினோ-ஹைப்போபைஸிஸ்) சுரக்கும் ஹார்மோன்கள்
வளர்ச்சி ஹார்மோன் (GH)
தைராய்டைத் தூண்டும் ஹார்மோன் (TSH)
அட்ரினோ கார்ட்டிக்கோட்ராபிக் ஹார்மோன்/ அட்ரினல் புறணியை தூண்டும் ஹார்மோன் (ACTH)
கொனாடோட்ராபிக் ஹார்மோன் (GTH)
ப்ரோலாக்டின் (PRL)
A. வளர்ச்சி ஹார்மோன் (GH)
வளர்ச்சி ஹார்மோன் என்பது உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது.
தசைகள் குருத்தெலும்பு மற்றும் எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
இது செல்களின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.
இந்த ஹார்மோனின் முறையற்ற சுரத்தல் கீழ்க்காணும் விளைவுகளை ஏற்படுத்தும்.
குள்ளத்தன்மை
அசுரத்தன்மை
அக்ரோமெகலி
B. தைராய்டைத் தூண்டும் ஹார்மோன் (TSH)
இந்தஹார்மோன் தைராய்டு சுரப்பியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அதன் செயல்களையும் ஹார்மோன் சுரத்தலையும் ஒருங்கிணைக்கும் .
C. அட்ரினோ கார்ட்டிக்கோட்ராபிக் ஹார்மோன்/ அட்ரினல் புறணியைத் தூண்டும் ஹார்மோன் (ACTH)
இது அட்ரினல் சுரப்பியின் புறணியைத் தூண்டி, ஹார்மோன்களை சுரக்கச் செய்யும்.
மேலும் அட்ரினல் புறணியில் நடைபெறும் புரத உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
D. கொனடோட்ராபிக் ஹார்மோன்கள் (GTH)
ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன் மற்றும்
லூட்டினைசிங் ஹார்மோன்
ஆகிய இரு கொனடோட்ராபிக் ஹார்மோன்களும் இயல்பான இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சிக்கு காரணமாகின்றன.
1. ஃபாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன் (FSH)
இது ஆண்களில், விந்தகங்களின் எபிதீலியத்தை தூண்டுவதன் மூலம் விந்தணுக்கள் உருவாக்கத்திற்கும், பெண்களின் அண்டச் சுரப்பியினுள் அண்டச் செல்கள் வளர்ச்சி அடைவதை ஊக்குவிப்பதற்கும் காரணமாகிறது.
2. லூட்டினைசிங் ஹார்மோன் (LH)
ஆண்களில் லீடிக்செல்கள் தூண்டப்படுவதன் மூலம் ஆண் இனப்பெருக்க ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் சுரக்க காரணமாகின்றது.
பெண்களின் அண்டம் விடுபடும் செயலுக்கும், கார்ப்பஸ் லூட்டியம் வளர்ச்சியடையவும், பெண் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் உருவாக்கத்திற்கும் காரணமாக உள்ளது.
E. புரோலாக்டின் (PRL)
இது லாக்டோஜனிக் ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது.
இது குழந்தைப்பேறு காலத்தில் பால் சுரப்பியின் வளர்ச்சி மற்றும் குழந்தை பேற்றிற்கு பின் பால் உற்பத்தியை தூண்டவும் செய்கிறது.
பிட்யூட்டரியின்பின்கதுப்பு (நியூரோ-ஹைப்போபைஸிஸ்) சுரக்கும் ஹார்மோன்கள்
வாசோபிரஸ்ஸின் (அ) ஆன்டிடையூரிட்டிக்ஹார்மோன் (ADH)
ஆக்ஸிடோசின்
1. வாசோபிரஸ்ஸின் (அ) ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன்(ADH)
சிறுநீரக குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுதலை அதிகரிக்கிறது.
இதன் காரணமாக சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும் நீர் இழப்பைக் குறைக்கிறது. எனவே இது ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோன்) எனப்படுகிறது.
ADH குறைவாக சுரப்பதால், அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றும் நிலை (பாலியூரியா) உண்டாகிறது.
இக்குறைபாடு டயாபடீஸ் இன்சிபிடஸ் எனப்படும்.
2. ஆக்ஸிடோசின்
பெண்களின் குழந்தைப்பேற்றின் போது கருப்பையை சுருக்கியும், விரிவடையச் செய்தும், குழந்தைப்பேற்றுக்கு பிறகு பால் சுரப்பிகளில் பாலை வெளியேற்றுவதற்கும் காரணமாகிறது.
பீனியல் சுரப்பி (Pineal gland)
மனிதனில், எபிபைசிஸ் செரிப்ரை (Epiphysis cerebri) (அ) கொனேரியம் (Conarium) என்றழைக்கப்படும் பீனியல் சுரப்பி, மூளையின் மூன்றாவது வென்ட்ரிகிளின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. இது பாரன்கைமா மற்றும் இடையீட்டுச் செல்களால் ஆனது.
இது மெலடோனின் (Melatonin) மற்றும் செரடோனின் எனும் ஹார்மோனைச் சுரக்கின்றது.
மெலடோனின் உறக்கத்தையும், செரடோனின் விழிப்பையும் ஏற்படுத்துவதன் மூலம் நாள்சார் ஒழுங்கமைவு (Circadian rhythm) இயக்கத்தினைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கியப்பங்கு வகிக்கின்றது.
மேலும், இன உறுப்புகளின் பால் முதிர்ச்சிகால அளவை நெறிப்படுத்துதல், உடலின் வளர்சிதை மாற்றம், நிறமியாக்கம், மாதவிடாய் சுழற்சி மற்றும் தடைகாப்பு செயல்கள் ஆகியவற்றிலும் மெலடோனின் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
தைராய்டு சுரப்பி:
எட்வர்ட்.C.கெண்டல் என்பார் 1914 ஆம் ஆண்டில் முதன்முறையாக தைராக்சின் ஹார்மோனை படிக நிலையில் தனித்துப் பிரித்தார்.
சார்லஸ் ஹாரிங்டன் மற்றும் ஜார்ஜ் பார்ஜர் ஆகியோர் தைராக்சின் ஹார்மோனின் மூலக்கூறு அமைப்பை 1927 ஆம் ஆண்டில் கண்டறிந்தனர்.
ஒவ்வொரு நாளும் தைராய்டு சுரப்பியானது தைராக்சினைச் சுரக்க “120μg” அயோடின் தேவைப்படுகிறது.
ஓரிணைக் கதுப்புகள் கொண்ட, வண்ணத்துப்பூச்சி வடிவம் கொண்ட, தைராய்டு சுரப்பி மூச்சுக்குழலைச் சுற்றிக் குரல்வளைக்குக் கீழ் அமைந்துள்ளது
தைராய்டு சுரப்பி நமது உடலில் உள்ள மிகப்பெரிய நாளமில்லாச் சுரப்பியாகும்.
இதன் பக்கக் கதுப்புகள் இரண்டும் இஸ்துமஸ் (Isthmus) எனும் மையத்திசுத் தொகுப்பினால் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கதுப்பும் பல நுண்கதுப்புகளால் ஆனது. நுண்கதுப்புகள் அசினி எனும் ஃபாலிகிள்களால் ஆனவை.
அசினஸின் உட்பகுதி தைரோகுளோபுலின் மூலக்கூறுகள் (Thyroglobulin molecules) கொண்ட அடர்த்தி மிக்க, கூழ்ம, கிளைக்கோபுரதக் கலவையால் நிரம்பியுள்ளது
தைராய்டு ஹார்மோன்களின் உருவாக்கத்தில் ஒரு அமினோ அமிலம் டைரோசின் மற்றும் அயோடின் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
தைராய்டு சுரப்பியில் சுரக்கும் ஹார்மோன்கள்
ட்ரைஅயோடோ தைரோனின் (T3)
அயோடோ தைரோனின் அல்லது தைராக்சின் (T4).
தைராய்டு ஹார்மோன்களின் பணிகள்
அடிப்படை வளர்சிதை மாற்ற வீதத்தை (BMR) பராமரித்து, ஆற்றலை உற்பத்தி செய்கிறது.
உடல் வெப்ப நிலையை சமநிலையில் பராமரிக்கிறது
மைய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் பங்கேற்கிறது.
உடல் வளர்ச்சி மற்றும் எலும்புகள் உருவாக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
உடல், மனம் மற்றும் ஆளுமை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது.
இது “ஆளுமை ஹார்மோன்” என்றும் அழைக்கப்படுகிறது.
செல்களில் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது
தைராய்டு சுரப்பியின் குறைபாடுகள்
தைராய்டு சுரப்பி இயல்பான அளவு ஹார்மோன்களைச் சுரக்காத நிலை தைராய்டு குறைபாடு எனப்படுகிறது.
இது கீழ்க்கண்ட குறைபாடுகளை உருவாக்குகிறது.
ஹைப்போதைராய்டிசம்
தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக இந்நிலை ஏற்படுகிறது.
எளிய காய்டர், கிரிட்டினிசம், மிக்ஸிடிமா ஆகியவை ஹைபோ தைராய்டிசத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.
எளிய காய்ட்டர்
உணவில் தேவையான அளவு அயோடின் இல்லாததால் ஏற்படுகிறது.
கழுத்துப்பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு தைராய்டு சுரப்பி வீங்கி காணப்படும். இந்நிலை எளிய காய்ட்டர் எனப்படும்.
கிரிட்டினிசம்
குழந்தைகளில் குறைவான தைராய்டு ஹார்மோன் சுரப்பால் இந்நிலை ஏற்படுகிறது.
இதன் அறிகுறிகள் குள்ளத்தன்மை, குறைவான மனவளர்ச்சி, குறைபாடான எலும்புகள் வளர்ச்சி ஆகியவனவாகும்.
இவர்களை “கிரிட்டின்கள்” என்று அழைப்பர்.
மிக்ஸிடிமா
இது பெரியவர்களில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதால் ஏற்படுகிறது.
இதன் காரணமாக குறைவான மூளைசெயல்பாடு, முகம் உப்பிய அல்லது வீங்கிய தோற்றம், உடல் எடை அதிகரிப்பு ஆகியவை தோன்றும்.
ஹைபர்தைராய்டிசம்
தைராய்டு ஹார்மோன்களின் அதிகரித்த சுரப்பின் காரணமாக கிரேவின் நோய் (எக்ஸாப்தல்மிக்காய்டர்) பெரியவர்களில் உண்டாகிறது.
இதன் அறிகுறிகள், துருத்திய கண்கள் (எக்ஸாப்தல்மியா), வளர்சிதை மாற்ற வீதம் அதிகரித்தல், மிகை உடல் வெப்பநிலை, மிகையாக வியர்த்தல், உடல் எடை குறைவு, நரம்புத் தளர்ச்சி ஆகியவனவாகும்
பாராதைராய்டு சுரப்பி
மனிதனின் தைராய்டு சுரப்பியின் பின்பக்கச் சுவரில் நான்கு சிறிய பாராதைராய்டு சுரப்பிகள் உள்ளன .
பாராதைராய்டு சுரப்பி, முதன்மை செல்கள் (Chief cells) மற்றும் ஆக்ஸிஃபில் செல்கள் (Oxyphil cells) என்ற இருவகைச் செல்களால் ஆனது.
முதன்மைச் செல்கள் பாராதைராய்டு ஹார்மோனை (PTH) ஐ சுரக்கின்றது. ஆக்ஸிஃபில் செல்களின் பணி இன்னும் கண்டறியப்படவில்லை.
பாராதைராய்டு ஹார்மோன் அல்லது பாராதார்மோன் (Parathyroid hormone or Parathormone-PTH)
இது இரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை உயர்த்தும் ஹார்மோன் ஆகும்.
இந்தப் பெப்டைடு ஹார்மோன், இரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் சமநிலையைப் பேணுகிறது.
இரத்தத்திலுள்ள கால்சியம் அளவு PTH சுரப்பை கட்டுப்படுத்துகின்றது.
இந்த ஹார்மோன் எலும்பில் கால்சியம் சிதைவைத் தூண்டி (Osteoclast) இரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவை உயர்த்துகின்றது.
சிறுநீரக நுண்குழலிலிருந்து கால்சியம் மீள உறிஞ்சுதலையும், பாஸ்பேட் வெளியேறுதலையும், PTH மேம்படுத்துகின்றது.
மேலும், வைட்டமின் D செயல்பாட்டைத் தூண்டிச் சிறுகுடல் கோழைப்படலம் வழியாகக் கால்சியம் உட்கிரகித்தலை உயர்த்துகின்றது.
பாராதார்மோன் பணிகள்
மனிதஉடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
இரத்தத்தில் கால்சியம் அளவை பராமரிப்பதற்காக எலும்பு, சிறுநீரகம் மற்றும் குடல் ஆகியவற்றில் செயலாற்றுகிறது.
பாராதைராய்டு குறைபாடுகள்
தைராய்டெக்டமி என்னும் அறுவை சிகிச்சையில் (தைராய்டு சுரப்பி அகற்றப்படுவதால்) பாராதைராய்டு சுரப்பியில் சுரக்கும் பாராதார்மோன் குறைவாக சுரக்கிறது.
இதன் காரணமாக தசை இறுக்கம் எனப்படும் டெட்டனி ஏற்படுதல் மற்றும் கால் தசைகளில் வலியுடன் கூடிய தசைபிடிப்பு உண்டாதல் ஆகிய நிலைகள் ஏற்படுகின்றன.
தைமஸ் சுரப்பி (Thymus gland)
தைமஸ் சுரப்பியின் ஒரு பகுதி நாளமில்லாச் சுரப்பியாகவும் மறு பகுதி நிணநீர் உறுப்பாகவும் செயலாற்றக் கூடியது.
இரட்டைக் கதுப்புடைய தைமஸ் சுரப்பி, இதயம் மற்றும் பெருந்தமனிக்கு மேல் மார்பெலும்பிற்குப் பின் அமைந்துள்ளது
நார்த்திசுவாலான காப்சூல் எனும் உறை இச்சுரப்பியைச் சூழ்ந்துள்ளது. உள்ளமைப்பியல் அடிப்படையில் வெளிப்பகுதி புறணி மற்றும் உட்பகுதி மெடுல்லா ஆகிய இருபகுதிகளைக் கொண்டது.
தைமுலின், தைமோசின், தைமோபாய்டின் மற்றும் தைமிக்திரவக் காரணி (THF) ஆகிய நான்கு ஹார்மோன்களை தைமஸ் சுரக்கின்றது.
செல்வழித் தடைகாப்பை அளிக்கும் நோய்த்தடைகாப்பு திறன் கொண்ட T லிம்போசைட்டுகளை உற்பத்தி செய்வது தைமஸின் முதன்மைப் பணியாகும்.
கணையம் (லாங்கர்ஹான் திட்டுகள்)
கணையம் இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடையில், மஞ்சள் நிறத்தில் நீள் வாட்டத்தில் காணப்படும் சுரப்பியாகும்.
இது நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பியாக இரு வழிகளிலும் பணிபுரிகிறது.
கணையத்தின் நாளமுள்ள பகுதி கணைய நீரை சுரக்கிறது. இஃது உணவு செரித்தலில் முக்கிய பங்காற்றுகிறது.
நாளமில்லாச் சுரப்பு பகுதியானது லாங்கர்ஹான் திட்டுகள் எனப்படுகிறது.
மனித கணையத்தில் ஒன்று முதல் இரண்டு மில்லியன் லாங்கர்ஹானின் திட்டுகள் உள்ளன.
ஒவ்வொரு திட்டிலும் 60% பீட்டா செல்களும், 30% ஆல்ஃபா செல்களும், 10% டெல்டா செல்களும் உள்ளன.
ஆல்ஃபா செல்கள் - குளுக்ககானையும், பீட்டா செல்கள்- இன்சுலினையும் டெல்டா செல்கள் - சொமட்டோஸ்டேடின் என்ற ஹார்மோனையும் சுரக்கின்றது.
கணைய ஹார்மோன்களின் பணிகள்
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பராமரிப்பதற்கு இன்சுலின், குளுக்கோகான் சுரப்பினை சம அளவில் நிலைநிறுத்துவது அவசியமாகிறது.
இன்சுலின்
குளுக்கோஸைக் கிளைக்கோஜனாக மாற்றிக் கல்லீரலிலும் தசைகளிலும் சேமிக்கிறது.
செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதை ஊக்குவிக்கிறது.
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.
இது கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றுதல், அமினோ அமிலம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றை குளுக்கோஸாக மாற்றுதல் ஆகிய பணிகளின் வேகத்தைத் தடுக்கிறது.
எனவே தான் இன்சுலின், ஹைபோகிளைசீமிக் ஹார்மோன் (இரத்த சர்க்கரை குறைப்பு ஹார்மோன்) எனப்படுகிறது.
பிளாஸ்மாவில் இன்சுலினின் அரை ஆயுட்காலம் 6 நிமிடங்கள்.
இரத்தத்திலிருந்து இன்சுலின் வெளியேற எடுத்துக்கொள்ளும் நேரம் 10-15 நிமிடங்கள்.
குளுக்கோகான்
கல்லீரலில் கிளைக்கோஜன் குளுக்கோஸாக மாற்றம் அடைய உதவுகிறது.
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.
இந்த ஹார்மோன் ஹைபர் கிளைசீமிக் ஹார்மோன் (இரத்தச்சர்க்கரையை உயர்த்தும் ஹார்மோன்) எனப்படுகிறது.
டயாபடீஸ் மெலிடஸ்
இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படுவதால் உண்டாவது டயாபடீஸ் மெலிடஸ்.
இக்குறைபாட்டின் காரணமாக
இரத்தசர்க்கரை அளவு அதிகரித்தல் (ஹைபர்கிளைசீமியா).
சிறுநீரில் அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுதல் (கிளைக்கோசூரியா).
அடிக்கடி சிறுநீர்கழித்தல் (பாலியூரியா).
அடிக்கடி தாகம் எடுத்தல் (பாலிடிப்சியா).
அடிக்கடி பசி எடுத்தல் (பாலிஃபேஜியா) போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன.
அட்ரினல் சுரப்பி
ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேற்புறத்திலும் அட்ரினல் சுரப்பிகள் அமைந்துள்ளன.
இவை சிறுநீரக மேற்சுரப்பிகள் (suprarenal glands) என்றும் அழைக்கப்படுகின்றன.
இதன் வெளிப்புறப்பகுதி அட்ரினல் கார்டெக்ஸ் என்றும் உட்புறப்பகுதி அட்ரினல் மெடுல்லா என்றும் அழைக்கப்படும்.
இவ்விரு பகுதிகளும் அமைப்பு மற்றும் பணிகளில் வேறுபடுகின்றன.
அட்ரினல்கார்டெக்ஸ்
அட்ரினல் கார்டெக்ஸ் மூவகையான செல் அடுக்குகளால் ஆனது. அவை
சோனா குளாமருலோசா,
சோனா ஃபாஸிகுலேட்டா
சோனா ரெடிகுலாரிஸ்.
அட்ரினல் கார்டெக்ஸில் சுரக்கும் ஹார்மோன்கள் கார்ட்டிகோஸ்டீராய்டுகள் ஆகும். அவை
குளுக்கோகார்ட்டிகாய்டுகள்
மினரலோக்கார்டிகாய்டுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அட்ரினோகார்டிகாய்டு ஹார்மோன்களின் பணிகள்
குளுக்கோகார்ட்டிகாய்டுகள்
சோனா பாஸிகுலேட்டாவில் சுரக்கும் குளுக்கோகார்ட்டிகாய்டுகளாவான,
கார்ட்டிசோல்
கார்ட்டிகோஸ்டிரான்.
இது செல்களில் வளர்சிதைமாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது.
கல்லீரலில் கிளைக்கோஜனை, குளுக்கோஸாக மாற்றுவதைத் தூண்டுகிறது.
இது அழற்சி மற்றும் ஒவ்வாமை தடுப்புப் பொருளாகச் செயல்படுகிறது.
மினரலோக்கார்டிகாய்டுகள்
சோனா குளாமருலோசாவில் உள்ளே மினரலோக்கார்டிகாய்டுகள் சுரக்கும் ஹார்மோன் ஆல்டோஸ்டிரான்.
சிறுநீரகக்குழல்களில் சோடியம் அயனிகளை மீள உறிஞ்சுதலுக்கு உதவுகிறது.
அதிகமான பொட்டாசியம் அயனிகளை வெளியேற்றக் காரணமாகிறது.
மின்பகு பொருட்களின் சமநிலை, நீர்மஅளவு, சவ்வூடு பரவல் அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது.
அட்ரினல்மெடுல்லா
அட்ரினல் மெடுல்லா குரோமாஃபின் செல்களாலனது.
இப்பகுதி பரிவு மற்றும் எதிர்ப் பரிவு நரம்புகள் நிறைந்து காணப்படுகிறது.
அட்ரினல்மெடுல்லா சுரக்கும் ஹார்மோன்கள்
இரண்டு ஹார்மோன்கள் அட்ரினல் மெடுல்லாவால் சுரக்கப்படுகின்றன. அவை
எபிநெஃப்ரின் (அட்ரினலின்)
நார்எபிநெஃப்ரின் (நார்அட்ரினலின்)
இவ்விரண்டு ஹார்மோன்களும் பொதுவாக “அவசர காலஹார்மோன்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
அதனால் இவை மன அழுத்தம் மற்றும் உணர்ச்சி வசப்படும் காலங்களில் உற்பத்தியாகின்றன.
எனவே இந்த ஹார்மோன்கள், "சண்டை, பயமுறுத்தும் அல்லது பறக்கும் ஹார்மோன்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.
அட்ரினல்மெடுல்லா சுரக்கும் ஹார்மோன்களின் பணிகள்
எபிநெஃப்ரின் (அட்ரினலின்)
கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றுவதை ஊக்குவிக்கின்றது.
இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.
மூச்சுக்குழல் மற்றும் மூச்சுச் சிற்றறை ஆகியவற்றை விரிவடையச் செய்வதன் மூலம் சுவாச வீதத்தை அதிகரிக்கச் செய்கிறது.
கண் பாவையை விரிவடையச் செய்கிறது.
தோலினடியில் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது.
நார் எபிநெஃப்ரின் (நார்அட்ரினலின்)
இவற்றின் பெரும்பாலான செயல்கள் எபிநெஃப்ரின் ஹார்மோனின் செயல்பாடுகளை ஒத்திருக்கின்றன.
இனப்பெருக்கச் சுரப்பிகள்
இனப்பெருக்கச் சுரப்பிகள் இரு வகைப்படும். அவை ஆண்களில் விந்தகம் மற்றும் பெண்களில் அண்டகம் ஆகும்.
விந்தகம் (Testis)
இவை ஆண்களின் இனப்பெருக்க சுரப்பிகளாகும்.
ஒவ்வொரு விந்தகமும் ‘டியூனிகா அல்புஜினியா’ (Tunica albuginea) என்னும் நாரிழைத் தன்மை கொண்ட வெளிப்புற உறையால் மூடப்பட்டுள்ளது.
ஆண் இனப்பெருக்க மண்டலத்தில்
ஓரிணை விந்துப்பைகளும் (Seminal vesicles),
கௌப்பர் சுரப்பிகள் (Cowper's gland) என அழைக்கப்படும் ஓரிணை பல்போயுரித்ரல் (Bulbourethral gland) சுரப்பிகளும்
ஒற்றை புரோஸ்டேட் சுரப்பியும் (Prostate gland) துணை சுரப்பிகளாக உள்ளன
லீடிக் செல்கள்:
விந்து நுண்குழல்களைச் சூழ்ந்துள்ள மென்மையான இணைப்புத் திசுவினுள் இடையீட்டு செல்கள் (Interstitial cells) அல்லது லீடிக்செல்கள் (leydig cells) பொதிந்து காணப்படுகின்றன.
இச்செல்கள் விந்து செல்லாக்கத்தைத் தொடங்கும் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் (Testosterone) எனும் ஆண் இன ஹார்மோனைச்(Androgens) சுரக்கின்றன.
நாளமில்லாச் சுரப்பித் தன்மையைப் பெற்றுள்ள இச்செல்கள் பாலூட்டிகளில் உள்ள விந்தகங்களின் முக்கியப் பண்பாக விளங்குகிறது.
நோய்த் தடைகாப்புத் திறன் பெற்ற பிற செல்களும் காணப்படுகின்றன.
டெஸ்டோஸ்டீரானின் பணிகள்
விந்து செல் உற்பத்தியில் பங்கேற்கிறது.
புரத உற்பத்தியினைத் தூண்டி தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இரண்டாம் நிலைபால் பண்புகளின் (உடல் மற்றும் முகத்தில் ரோமங்கள் வளர்தல், குரலில் ஏற்படும் மாற்றம் போன்றவை) வளர்ச்சிக்குக் காரணம் ஆகிறது.
அண்டகம்
பெண் இனச்செல்லான ‘அண்டசெல்லை’ உருவாக்கும் உறுப்பான அண்டகங்கள் தான் பெண்பாலுறுப்புகளுள் முதன்மையானதாகும்.
அடிவயிற்றின் இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக அண்டகங்கள் அமைந்துள்ளன.
இந்த இழைய வலை வெளிப்புற புறணி (கார்டெக்ஸ்) மற்றும் உட்புற மெடுல்லா ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
இனச்செல் எபிதீலியத்தின் அடிப்பகுதியில் ‘டியூனிகா அல்புஜீனியா’ (Tunica albuginea) எனும் அடர்த்தியான இணைப்புதிசு உள்ளது.
பெண்இனப்பெருக்கச் சுரப்பியான அண்டகங்கள் பெண்களின் அடிவயிற்றில் இடுப்பெலும்புப் பகுதியில் அமைந்துள்ளன. இவைசுரக்கும் ஹார்மோன்கள்
ஈஸ்ட்ரோஜன்,
புரோஜெஸ்டிரான்.
ஈஸ்ட்ரோஜன், வளர்ச்சியுறும் அண்டத்தின் கிராஃபியன் செல்களினால் சுரக்கப்படுகின்றது. புரோஜெஸ்டிரான், அண்டம் விடுபடும்போது பிரியும் ஃபாலிக்கிள்கள் உருவாக்கும் கார்ப்பஸ் லூட்டியத்தில் உற்பத்தியாகிறது.
ஈஸ்ட்ரோஜனின் பணிகள்
பருவமடைதலின் உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
அண்டசெல் உருவாக்கத்தைத் துவக்குகிறது
அண்டபாலிக்கிள் செல்கள் முதிர்வடைவதைத் தூண்டுகிறது.
இரண்டாம் நிலைபால் பண்புகள் (மார்பக வளர்ச்சி, குரலில் ஏற்படும் மாற்றம் போன்றவை) வளர்ச்சியடைவதை ஊக்குவிக்கிறது.
புரோஜெஸ்ட்ரானின் பணிகள்
இது கருப்பையில் நடைபெறும் முன் மாதவிடாய்கால மாற்றங்களுக்குக் காரணமாக உள்ளது.
கரு பதிவதற்கு கருப்பையை தயார் செய்கிறது.
கர்ப்பகாலத்தினைப் பராமரிக்கிறது.
தாய்-சேய் இணைப்புத்திசு உருவாவதற்கு அவசியமாகிறது.
நரம்பு மண்டலம்
நரம்பு மண்டலம் என்பது நரம்பு திசுக்களால் ஆனது.
இவை மூன்று வகையான உட்கூறுகளை கொண்டுள்ளது. அவை நியூரான்கள், நியூரோகிளியாக்கள் மற்றும் நரம்பு நாரிழைகள்.
நியூரான்கள் அல்லது நரம்பு செல்கள்:
நியூரான்கள் அல்லது நரம்பு செல்கள் என்பவை நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் ரீதியிலான அடிப்படை அலகுகள் ஆகும்
மனித உடலின் மிக நீளமான செல் நரம்பு செல் ஆகும். இவை சுமார் 100μm வரை நீளமுடையவை
நரம்பு செல்களில் தகவல்கள் உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மின்தூண்டல்களாகக் கடத்தப்படுகின்றது.
நியூரோகிளியா:
நியூரோகிளியா என்பவை கிளியல் செல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை நரம்பு மண்டலத்தின் துணைச் செல்களாக செயல்படுகின்றன.
இவை நியூரான்கள் போன்று நரம்பு தூண்டல்களின் உருவாக்கத்திலோ அல்லது கடத்துவதிலோ ஈடுபடுவதில்லை
நரம்பு நாரிழைகள்:
நியூரான்களின் மிகநீளமான, மெல்லிய செயல்படும் பகுதி நரம்பு நாரிழைகள் ஆகும்.
பலநரம்பு நாரிழைகள் ஒன்றிணைந்து கற்றையாக மாறி நரம்புகளாக செயல்படுகின்றன.
நியூரான்களின் அமைப்பு
நியூரான் என்பது கீழ்க்காணும் மூன்று பகுதிகளைக் கொண்டது.
சைட்டான்
டெண்ட்ரைட்டுகள் மற்றும்
ஆக்சான்
சைட்டான்
சைட்டான் என்பது செல் உடலம் அல்லது பெரிகேரியோன் என்றும் அழைக்கப்படும்.
இதன் மைய உட்கருவில் சைட்டோபிளாசம் நிரம்பியுள்ள பகுதி நியூரோபிளாசம் என்று அழைக்கப்படுகிறது.
நியூரான்கள் பகுப்படையும் தன்மையற்றவை.
சைட்டோபிளாசத்தினுள்ளே பல நுண்இழைகள் காணப்படுகின்றன. அவை செல் உடலத்தின் வழியாக நரம்பு தூண்டல்களை முன்னும் பின்னும் கடத்துவதற்கு உதவுகின்றன.
டெண்ட்ரைட்டுகள்:
செல் உடலத்தின் வெளிப்புறமாக பல்வேறு கிளைத்த பகுதிகள் காணப்படுகின்றன.
இவை நரம்புத் தூண்டல்களை சைட்டானை நோக்கிக் கடத்துகின்றன.
பிற நரம்பு செல்களில் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளை உள்வாங்கிக் கொள்ளும் பரப்பினை அதிகமாக்குகின்றன.
ஆக்சான்:
ஆக்சான் என்பது தனித்த, நீளமான, மெல்லிய அமைப்பு ஆகும்.
ஆக்சானின் முடிவுப்பகுதி நுண்ணிய கிளைகளாகப் பிரிந்து குமிழ் போன்ற “சினாப்டிக் குமிழ்” பகுதிகளாக முடிகின்றது.
ஆக்சானின் பிளாஸ்மா சவ்வு, ஆக்ஸோலெம்மா என்றும், சைட்டோபிளாசம், ஆக்ஸோபிளாசம் என்றும் அழைக்கப்படும்.
இவை தூண்டல்களை சைட்டானில் இருந்து எடுத்துச் செல்கின்றன.
ஆக்ஸானின் மேற்புறம் ஒரு பாதுகாப்பு உறையால் போர்த்தப்பட்டுள்ளது.
இவ்வுறை மையலின் உறை எனப்படும். இவற்றின் மேற்புறம் ஸ்வான் செல்களால் ஆன உறையால் பாதுகாக்கப்படுகிறது. இவ்வுறை நியூரிலெம்மா எனப்படும்
சினாப்ஸ்:
ஒரு நியூரானின் சினாப்டிக் குமிழ் பகுதிக்கும், மற்றொரு நியூரானின் டெண்ட்ரான் இணையும் பகுதிக்கும் இடையிலுள்ள இடைவெளிப் பகுதி சினாப்டிக் இணைவுப் பகுதி எனப்படுகிறது.
ஒரு நியூரானிலிருந்து தகவல்கள் மற்றொரு நியூரானுக்கு கடத்தப்படுவது சினாப்டிக் குமிழ் பகுதியில் வெளிப்படுத்தப்படும் வேதிப்பொருள் மூலமாக நடைபெறுகிறது. இவ்வேதிப்பொருட்கள் நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் அல்லது நரம்புணர்வு கடத்திகள் எனப்படுகின்றன.
நியூரான்களின் வகைகள்
நியூரான்கள் அவற்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தின் அடிப்படையில் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அமைப்பின் அடிப்படையில் நியூரான்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒருமுனை நியூரான்கள்:
இவ்வகை நியூரான்களில் ஒருமுனை மட்டுமே சைட்டானில் இருந்து கிளைத்து காணப்படும். இதுவே ஆக்சான் மற்றும் டெண்டிரானாக செயல்படும்.
மூளை நரம்புகள் மற்றும் தண்டு வட நரம்புகளின் நரம்பு செல் திரள்களில் இவை காணப்படுகின்றன.
இரு முனை நியூரான்கள்:
சைட்டானிலிருந்து இரு நரம்புப்பகுதிகள் இருபுறமும் இணைக்கப்பட்டிருக்கும். ஒன்று ஆக்சானாகவும் மற்றொன்று டெண்டிரானாகவும் செயல்படும்.
கண்களின் விழித்திரை , உட்செவி மற்றும் மூளையின் நுகர்ச்சிப் பகுதி ஆகிய இடங்களில் இந்த வகை நியூரான்கள் காணப்படுகின்றன.
பலமுனை நியூரான்கள்:
சைட்டானிலிருந்து பலடெண்ட்ரான்கள் கிளைத்து ஒரு முனையிலும், ஆக்சான் ஒரு முனையிலும் காணப்படும்.
பெரும்பாலான இடை நியூரான்கள் இவ்வகையினவே.
செயல்பாட்டின் அடிப்படையில் நியூரான்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன.
உணர்ச்சி அல்லது உட்செல் நரம்புச்செல்கள்:
உணர் உறுப்புகளிலிருந்து தூண்டல்களை மைய நரம்பு மண்டலத்துக்கு எடுத்துச் செல்லும் நரம்புச் செல்கள்.
இயக்க அல்லது வெளிச்செல் நரம்புச்செல்கள்:
மைய நரம்பு மண்டலத்தில் இருந்து தூண்டல்களை (தகவல்கள்) இயக்க உறுப்புகளான தசை நாரிழைகள் அல்லது சுரப்பிகளுக்கு எடுத்துச் செல்லும் நரம்பு செல்கள்.
சங்கம நரம்புச் செல்கள்:
இவ்வகை நரம்பு செல்கள் உணர்ச்சி மற்றும் இயக்க நரம்பு செல்களுக்கிடையே தூண்டல்களை கடத்தும் நரம்பு செல்களாகும்.
மனித நரம்பு மண்டலம்
நரம்பு நாரிழைகளின் வகைகள்
நரம்பு நாரிழைகள் இரு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவையாவன,
மையலின் உறையுடன் கூடிய நரம்பு செல்கள்
மையலின் உறையற்ற நரம்புச் செல்கள்.
மையலின் உறையுடன் கூடிய நரம்பு செல்கள்:
நரம்புச் செல்லிலுள்ள ஆக்சான் மீது மையலின் உறை போர்த்தப்பட்டிருந்தால் அவை மையலின் உறையுடன் கூடிய நரம்பு செல்கள்.
மையலின் உறையற்ற நரம்புச் செல்கள்:
நரம்புச் செல்லிலுள்ள ஆக்சான் மீது மையலின் உறை போர்த்தப்படாமலிருந்தால் அவை மையலின் உறையற்ற நரம்புச் செல்கள் என்றும் அழைக்கப்படும்.
மூளையின் வெண்மைநிறப் பகுதி மையலின் உறையுடன் கூடிய நரம்புச் செல்களையும், சாம்பல்நிறப் பகுதி மையலின் உறையற்ற நரம்புச் செல்களையும் கொண்டது.
மனித நரம்பு மண்டலம்
மனிதர்களாகிய நாம் சிந்தித்து செயல்படும் ஆற்றலின் காரணமாக பிற விலங்கினங்களில் இருந்து வேறுபட்டிருக்கிறோம்.
இதற்கு சிறப்பான நரம்பு மண்டலம் காரணமாக அமைந்துள்ளது.
மனித நரம்பு மண்டலமானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,
மைய நரம்பு மண்டலம் (CNS),
புற அமைவு நரம்பு மண்டலம் (PNS),
தானியங்கு நரம்பு மண்டலம் (ANS) ஆகும்
மைய நரம்பு மண்டலமானது தகவல்களை பரிசீலித்து செயல்படுத்தும் கட்டுப்பாட்டு மையமாக செயல்படுகிறது.
இது மூளை மற்றும் தண்டுவடத்தை உள்ளடக்கியது.
புற அமைவு நரம்பு மண்டலம் மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து உடலின் பிற பகுதிகளை இணைக்கும் நரம்புகளை உள்ளடக்கியது.
தானியங்கு நரம்பு மண்டலமானது பரிவு நரம்புகளையும் எதிர்ப்பரிவு நரம்புகளையும் கொண்டது.
மைய நரம்பு மண்டலம்
மைய நரம்பு மண்டலமானது மூளை மற்றும் தண்டு வடம் ஆகிய மென்மையான முக்கிய உறுப்புகளை உள்ளடக்கியது. இவை பாதுகாப்பாக மண்டையோட்டின் உள்ளேயும், முள்ளெலும்புக் கால்வாயினுள்ளும் அமைந்துள்ளன.
மைய நரம்பு மண்டலமானது மையலின் உறையுடன் கூடிய வெண்மையான பகுதி அல்லது மையலின் உறையற்ற சாம்பல் நிற பகுதிகளால் ஆனது.
மூளை:
உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் மையம் மூளையாகும். மூளையானது மூன்று பாதுகாப்பான உறைகளால் சூழப்பட்டிருக்கிறது.
அவை மெனிஞ்சஸ் அல்லது மூளை உறைகள் எனப்படும்.
டியூரா மேட்டர்: (டியூரா: கடினமான, மேட்டர்: சவ்வு)
வெளிப்புற தடிமனான சவ்வுப்படலம் ஆகும்.
அரக்னாய்டு உறை: (அரக்னாய்டு : சிலந்தி)
நடுப்புற மென்மையான சிலந்தி வலை போன்ற சவ்வுப்படலம் ஆகும்.
பையா மேட்டர்: (பையா: மென்மையான)
இது உட்புற மெல்லிய உறையாகும். இதில் அதிகமான இரத்த நாளங்கள் காணப்படுகின்றன.
மூளையின் உறைகள் அனைத்தும் மூளையை அடிபடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன.
மனித மூளை:
மனித மூளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவையாவன:
முன் மூளை
நடு மூளை
பின் மூளை.
முன் மூளை:
முன் மூளையானது பெரு மூளை (செரிப்ரம்) மற்றும் டயன்செஃப்லான் என்பவைகளால் ஆனது.
டயன்செஃப்லான் மேற்புற தலாமஸ் மற்றும் கீழ்ப்புற ஹைப்போதலாமஸ் கொண்டுள்ளது.
மூளையின் பெரிய பகுதியான பெருமூளை , அறிவின் அமர்விடம் (Seat of intelligence) எனப்படும்.
பெருமூளை
மூளையின் மூன்றில் இரண்டு பகுதி அளவுக்கு பெரும்பான்மையாக இப்பகுதி அமைந்துள்ளது.
பெரு மூளையானது நீள்வாட்டத்தில் வலது மற்றும் இடது என இரு பிரிவுகளாக ஒரு ஆழமான பிளவு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிளவு நடுப்பிளவு (median Cleft) எனப்படும்.
இப்பிரிவுகள் செரிப்ரல் ஹெமிஸ்பியர் / பெரு மூளை அரைக் கோளங்கள் என்று அழைக்கப்படும். இப்பிரிவுகள் மூளையின் அடிப்பகுதியில் கார்பஸ் கலோசம் என்னும் அடர்த்தியான நரம்புத் திசுக்கற்றையால் இணைக்கப்பட்டுள்ளன.
பெருமூளையின் வெளிப்புற பகுதி, சாம்பல் நிறப்பகுதியால் ஆனது. இது பெருமூளைப் புறணி (cerebral cortex) எனப்படும்.
பெருமூளையின் உட்புற ஆழமான பகுதி வெண்மை நிறப் பொருளால் ஆனது. பெருமூளைப் புறணி அதிகமான மடிப்புகளுடன் பல சுருக்கங்களைக் கொண்டு காணப்படும்.
இவற்றின் மேடு “கைரி” என்றும், பள்ளங்கள் “சல்சி” என்றும் அழைக்கப்படும்.
ஒவ்வொரு பெரு மூளை அரைக்கோளமும், முன்புறக் கதுப்பு, பக்கவாட்டுக் கதுப்பு, மேற்புறக் கதுப்பு மற்றும் பின்புறக் கதுப்பு என்று பிரிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் பெருமூளை கதுப்புகள் என அழைக்கப்படும்.
இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட செயலுக்கு பொறுப்பானவை.
பெரு மூளையானது சிந்தித்தல், நுண்ணறிவு, விழிப்புணர்வு நிலை, நினைவுத் திறன், கற்பனைத்திறன், காரணகாரியம் ஆராய்தல் மற்றும் மன உறுதி ஆகியவற்றுக்கு காரணமானதாகும்.
தலாமஸ்
பெருமூளையின் உட்புற ஆழமான பகுதியான மெடுல்லாவைச் சூழ்ந்து தலாமஸ் அமைந்துள்ளது.
உணர்வு மற்றும் இயக்க தூண்டல்களைக் கடத்தும் முக்கியமான கடத்து மையமாக தலாமஸ் செயல்படுகிறது.
கற்றல் மற்றும் நினைவாற்றலில் தலாமஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஹைபோதலாமஸ்
ஹைபோ என்பதற்கு கீழாக என்று பொருள். இப்பொருளுக்கேற்ப இது தலாமஸின் கீழ்ப்பகுதியில் உள்ளது.
இது உள்ளார்ந்த உணர்வுகளான பசி, தாகம், தூக்கம், வியர்வை, பாலுறவுக் கிளர்ச்சி, கோபம், பயம், ரத்த அழுத்தம், உடலின் நீர் சமநிலை பேணுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.
இது உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் மையமாக செயல்படுகிறது.
மேலும் இது பிட்யூட்டரி சுரப்பியின் முன் கதுப்பு ஹார்மோன் சுரப்புகளைக் கட்டுப்படுத்துகிறது.
தலாமஸ் நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லாச் சுரப்பு மண்டலத்தின் இணைப்பாக செயல்படுகிறது.
“மெனிஞ்சைடிஸ்" என்பது மூளை உறைகளில் ஏற்படும் வீக்கம் ஆகும்.
மூளை உறையைச் சுற்றி உள்ள திரவத்தில் ஏற்படும் நோய்த் தொற்றால் இந்த வீக்கம் உண்டாகிறது.
வைரஸ் மற்றும் பாக்டீரியங்களின் நோய்த் தொற்று இதற்குக் காரணமாகிறது.
நடுமூளை
இது தலாமஸிற்கும் பின் மூளைக்கும் இடையில் அமைந்துள்ளது.
நடுமூளையின் கீழ்ப்பகுதியில் ஓரிணை நீள்வச நரம்புத்திசு கற்றைகள் உள்ளன. இதற்குப் பெருமூளைக் காம்புகள் (Cerebral peduncles) என்று பெயர். நடுமூளையின் பின்புறத்தில் நான்கு கோள வடிவிலான பகுதிகள் உள்ளன. இவை கார்ப்போரா குவாட்ரிஜெமினா என அழைக்கப்படும். இவை பார்வை மற்றும் கேட்டலின் அனிச்சைச் செயல்களை கட்டுப்படுத்துகிறது.
பின் மூளை
பின் மூளையானது சிறுமூளை, பான்ஸ் மற்றும் முகுளம் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியது.
சிறுமூளை, மூளையின் இரண்டாவ து பெரிய பகுதியாகும்.
இதில் இரண்டு அரைக்கோளங்களும் நடுவில் புழுக்கள் வடிவத்திலான வெர்மிஸ் (Vermis) பகுதியும் காணப்படுகிறது.
சிறுமூளை
மூளையின் இரண்டாவது மிகப்பெரிய பகுதி சிறு மூளை ஆகும். சிறு மூளையானது மையப்பகுதியில் இரண்டு பக்கவாட்டு கதுப்புகளுடன் காணப்படும்.
இது இயக்கு தசைகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உடல் சமநிலையைப் பேணுதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.
பான்ஸ்
பான்ஸ்" என்னும் இலத்தின் மொழி சொல்லுக்கு “இணைப்பு” என்று பொருள்.
இது சிறு மூளையின் இரு புற பக்கவாட்டு கதுப்புகளை இணைக்கும் இணைப்பு பகுதியாக செயல்படுகிறது.
இது சிறு மூளை, தண்டுவடம், நடுமூளைமற்றும் பெருமூளை ஆகியவற்றிற்கிடையே சமிக்ஞைகளை கடத்தும் மையமாக செயல்படுகிறது.
இது சுவாசம் மற்றும் உறக்க சுழற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
முகுளம்
மூளையின் கீழ்ப்பகுதியான முகுளம் தண்டுவடத்தையும் மூளையின் பிற பகுதிகளையும் இணைக்கின்றது.
இது இதயத் துடிப்பினை கட்டுப்படுத்தும் மையம், சுவாசத்தினை கட்டுப்படுத்தும் சுவாசமையம், இரத்தக் குழாய்களின் சுருக்கத்தினை கட்டுப்படுத்தும் மையம் ஆகிய மையங்களை உள்ளடக்கியது.
மேலும் உமிழ்நீர் சுரப்பது மற்றும் வாந்தி எடுத்தல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது.
தண்டுவடம்
தண்டுவடமானது குழல் போன்ற அமைப்பாக முதுகெலும்பின் உள்ளே முள்ளெலும்புத் தொடரின் நரம்புக் குழலுக்குள் அமைந்துள்ளது.
மூளையைப் போன்று தண்டுவடமும் மூவகை சவ்வுகளால் மூடப்பட்டுள்ளது.
இது முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கி இடுப்பெலும்பின் கீழ்ப்புறம் வரை அமைந்துள்ளது
தண்டுவடத்தின் கீழ்ப்புறம் குறுகிய மெல்லிய நார்கள் இணைந்தது போன்ற அமைப்பு காணப்படுகிறது. இது “ஃபைலம் மினலே” எனப்படுகிறது.
தண்டுவடத்தின் உட்புறம், தண்டுவடத் திரவத்தால் நிரம்பியுள்ள குழல் உள்ளது.
இது மையக்குழல் (central canal) எனப்படுகிறது.
தண்டுவடத்தின் சாம்பல் நிறப்பகுதியானது ஆங்கில எழுத்தான “H” போன்று அமைந்துள்ளது.
“H” எழுத்தின் மேற்பக்க முனைகள் “வயிற்றுப்புறக் கொம்புகள்” (posterior horns) என்றும், கீழ்ப்பக்க முனைகள் “முதுகுப்புறக் கொம்புகள்” (anterior horns) என்றும் குறிப்பிடப்படுகிறது.
வயிற்றுப்புறக் கொம்புப் பகுதியில் கற்றையான நரம்பிழைகள் சேர்ந்து பரிவு நரம்புகளை உண்டாக்குகின்றன.
முதுகுப்புற கொம்பு பகுதிகளிலிருந்து வெளிப்புறமாக வரும் நரம்பிழைகள் எதிர்ப்பரிவு நரம்புகளை உண்டாக்குகின்றன.
இவையிரண்டும் இணைந்து தண்டுவட நரம்புகளை (spinal nerves) உண்டாக்குகின்றன.
வெளிப்புற வெண்மை நிறப்பகுதி நரம்பிழைக் கற்றைகளைக் கொண்டுள்ளது.
தண்டு வடமானது, மூளைக்கும் பிற உணர்ச்சி உறுப்புகளுக்கும் இடையே உணர்வுத் தூண்டல்களையும், இயக்கத் தூண்டல்களையும், முன்னும் பின்னுமாக கடத்தக்கூடியது.
இது உடலின் அனிச்சைச் செயல்களைக் கட்டுப்படுத்துகிறது
மூளைத் தண்டுவட திரவம்
மூளையானது சிறப்பு திரவத்தினுள் மிதந்த நிலையில் காணப்படுகிறது. இச்சிறப்பு திரவம் மூளைத் தண்டுவடத் திரவம் என்றழைக்கப்படுகிறது.
மண்டையோட்டினுள் நிணநீர் போன்றுள்ள இத்திரவம் மூளையை அதிர்வுகளில் இருந்து பாதுகாக்கின்றது.
தண்டு வடத்தின் மையக் குழலினுள்ளும் இத்திரவம் நிரம்பியுள்ளது.
பணிகள்
திடீர் அதிர்வுகளின் போது மூளை பாதிப்படையாமல் பாதுகாக்கிறது.
மூளைக்கான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் பணியை மேற்கொள்கிறது.
மூளையில் உருவாகும் கழிவுகளை சேகரித்து வெளியேற்றும் பணியினை மேற்கொள்கிறது.
மூளைப்பெட்டகத்தின் உள்ளே நிலையான அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
அனிச்சைச் செயல்
அனிச்சைச் செயல் என்பது தன்னிச்சையாக ஒரு தூண்டலுக்கு பதில் விளைவாக நடக்கும் எதிர்வினை ஆகும்.
இரு வகையான அனிச்சைச் செயல்கள்காணப்படுகின்றன.
எளிய அல்லது அடிப்படையான அனிச்சைச் செயல்கள்:
இவ்வகையான அனிச்சைச் செயல்கள் உள்ளார்ந்த மற்றும் கற்றுணராத துலங்கல்களாகும்.
நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் பல எளிமையான அனிச்சைச் செயல்களை பயன்படுத்துகிறோம். உதாரணமாக நமது கண்ணில் தூசி விழும் போது இமைகளை மூடுதல்,
பெறப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அனிச்சைச் செயல்கள்:
இவ்வகையான அனிச்சைச் செயல்கள் கற்றல் மற்றும் பயிற்சியின் மூலம் செயல்படுத்தப்படுபவையாகும்.
ஹார்மோனியம் வாசித்தலின் போது இசை குறிப்புகளுக்கேற்ப சரியான கட்டையை அழுத்துவதும், விடுவிப்பதும் கற்றல் மூலம் பெறப்பட்ட அனிச்சைச் செயலாகும்.
பெரும்பாலான அனிச்சைச் செயல்கள் தண்டு வடத்தினால் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே இவை தண்டுவட அனிச்சைச் செயல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
நரம்பு செல்களுக்கிடையே நடைபெறும் தூண்டல் துலங்கல் அனிச்சைச் செயல் பாதைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து அனிச்சை வில் எனப்படும்.
புற அமைவு நரம்பு மண்டலம்
மூளைமற்றும் தண்டுவடத்தில் இருந்து உருவாகும் நரம்புகள் புற அமைவு நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன.
மூளையிலிருந்து உருவாகும் நரம்புகள் மூளை நரம்புகள் / கபால நரம்புகள் என அழைக்கப்படும்.
தண்டுவடத்தில் இருந்து உருவாகும் நரம்புகள் தண்டுவட நரம்புகள் என அழைக்கப்படும்.
மூளை நரம்புகள் / கபால நரம்புகள்
மனிதர்களில் மூளையிலிருந்து 12 இணை கபால நரம்புகள் உருவாகின்றன.
சில கபால நரம்புகள் உணர்ச்சி நரம்புகளாக செயல்படுகின்றன.
எடுத்துகாட்டு: கண்ணில் உள்ளபார்வை நரம்புகள்.
தண்டுவட நரம்புகள்
தண்டுவடத்தில் இருந்து 31 இணைத் தண்டுவட நரம்புகள் உள்ளன.
ஒவ்வொரு தண்டுவட நரம்பும் கீழ்ப்புற உணர்ச்சி வேர்களையும், மேற்புற இயக்க வேர்களையும் கொண்டுள்ளது.
மேற்புற தண்டுவட நரம்பு வேர்கள் தூண்டல்களை தண்டுவடத்தை நோக்கி கடத்தும் படியும், கீழ்ப்புற தண்டுவடநரம்பு வேர்கள் தண்டுவடத்திலிருந்து வெளிப்புறமாக கடத்தும்படியும் அமைந்துள்ளது.
தானியங்கு நரம்பு மண்டலம்
தானியங்கு நரம்பு மண்டலமானது உள்ளுறுப்பு நரம்பு மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது.
உள்ளபரிவு நரம்புகளும், எதிர்ப் பரிவு நரம்புகளும் ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்பட்டு நமது உடல் உள்ளுறுப்புகளின் இயக்கங்களை ஒழுங்குபடுத்துகிறது.
இவ்விரு நரம்புகளும் எதிரெதிராகச் செயல்பட்டு நமது உடலில் உள்ள உள்ளுறுப்புகளை மிக துரிதமாகச் செயல்பட வைப்பதன் மூலம் உடலை சம நிலையில் பராமரிக்க உதவுகின்றன.
மனித இனப்பெருக்க மண்டலம்
ஆண் மற்றும் பெண்களின் இனப்பெருக்க அமைப்புகளில் உள்ள பல்வேறு உறுப்புகள் முதன்மை மற்றும் இரண்டாம் பாலின உறுப்புகளாக வேறுபட்டுக் காணப்படுகின்றன.
முதன்மைப் பாலின உறுப்புக்களான பாலினச் சுரப்பிகள் (Gonads) பாலின உயிரணுவைத் (Gametes) தயாரிக்கின்றன. அதைப்போல பாலின ஹார்மோன்களையும் சுரக்கின்றன.
ஆண் இனப்பெருக்க மண்டலம்
மனித ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் விந்தகம் (முதன்மை இனப்பெருக்கஉறுப்பு), விரைப்பை (scrotum), விந்துநாளம் (vas deferens), சிறுநீர் புறவழிக் குழாய் (urethra), ஆணுறுப்பு (penis) மற்றும் துணைச் சுரப்பிகள் (accessory glands) ஆகியவை உள்ளன.
விந்தகங்கள்:
ஆண்களில் வயிற்றறைக்கு வெளியில் ஒரு ஜோடி விந்தகங்கள் உள்ளன. இந்தவிந்தகங்கள் ஆண்பாலினச் சுரப்பிகள் ஆகும். இதிலிருந்து ஆண்பாலின உயிரணு (விந்து) மற்றும் ஆண்பாலியல் ஹார்மோன்கள் (டெஸ்டோஸ்டிரான்) உற்பத்தி செய்யப்படுகின்றது.
ஒவ்வொரு விந்தகத்தின் உட்புறத்தில் சுருட்டப்பட்ட நுண்குழாய்கள் அதிகமாக உள்ளன. அவை எப்பிடிடைமிஸ் (epididymis) என அழைக்கப்படுகின்றன.
அதைப்போல் விந்தகத்தில் காணப்படும் செர்டோலி (sertoli) செல்கள் வளரும் விந்தணுவுக்கு ஊட்டத்தினை வழங்குகின்றன.
ஒவ்வொரு விந்தகமும் ‘டியூனிகா அல்புஜினியா’ (Tunica albuginea) என்னும் நாரிழைத் தன்மை கொண்ட வெளிப்புற உறையால் மூடப்பட்டுள்ளது.
ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் ஓரிணை விந்துப்பைகளும் (Seminal vesicles), கௌப்பர் சுரப்பிகள் (Cowper's gland) என அழைக்கப்படும் ஓரிணை பல்போயுரித்ரல் (Bulbourethral gland) சுரப்பிகளும் மற்றும் ஒற்றை புரோஸ்டேட் சுரப்பியும் (Prostate gland) துணை சுரப்பிகளாக உள்ளன.
விந்தணுக்களைக் கட்டுப்படுத்தும் காரணிகள்
பிட்யூட்டரி சுரப்பியின் FSH விந்தணுக்களை தூண்டுகிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது.
இது விந்தணுக்களின் முதிர்ச்சியின் கடைசி கட்டங்களை எளிதாக்க செர்டோலி கலங்களில் செயல்படுகிறது.
இது டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஆண்ட்ரோஜன்களின் உற்பத்தியை மேலும் தூண்டுகிறது
விந்தணுக்களின் வெப்பநிலையை 32 டிகிரி செல்சியஸ் இல் பராமரிக்க வேண்டும்.
விந்தணுக்கள்
ஒவ்வொரு முதிர்ந்த விந்தணுக்களும் ஒரு மோட்டல் செல் ஆகும்.
இது ஒரு அக்ரோசோம் மற்றும் குரோமோசோமால் பொருள் கொண்ட ஒரு பெரிய கரு கொண்ட ஓவல் தட்டையான தலையைக் கொண்டுள்ளது.
தலையைத் தொடர்ந்து ஒரு குறுகிய கழுத்து, ஒரு உடல் (நடுத்தர துண்டு) மற்றும் ஒரு நீண்ட வால் கொண்டுள்ளது.
நடுத்தர துண்டு சுழல் மைட்டோகாண்ட்ரியல் உறைகளைக் கொண்டுள்ளது, அவை ஆற்றலின் உற்பத்தி தளமாகும்.
வால் பகுதியில் ஒரு முனைப் பகுதியும் ஒரு முடிவுப் பகுதியும் உள்ளது.
ஹார்மோன் கட்டுப்பாடு:
ஆண் இனப்பெருக்க செயல்பாடு பல ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. மூளையின் ஹைபோதாலமஸ் FSH மற்றும் LH வெளியீட்டைக் கட்டுப்படுத்துகிறது
அதன் வெளியீட்டு காரணிகள்.
FSH மற்றும் LH ஆகியவை கோனாட்களைத் தூண்டுகின்றன. எனவே கோனாட்கள் விந்தணுக்களை உருவாக்குகின்றன. டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோனை சுரக்கிறது.
டெஸ்டோஸ்டிரோன் மேலும் ஆண் இனப்பெருக்க செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது.
இரண்டாம் நிலை பாலியல் பண்புகளை உருவாக்க மற்றும் பராமரிக்க உதவுகிறது எ.கா. குரல்வளை, குரலை ஆழமாக்குதல், முடியின் வளர்ச்சி மற்றும் பிற பருவ வயது மாற்றங்கள்.
பெண் இனப்பெருக்க மண்டலம்
பெண் இனப்பெருக்க மண்டலமானது, அண்டகங்கள் (முதன்மைபாலின உறுப்பு), கருப்பைக்குழாய், கருப்பை, யோனிக்குழாய் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
அண்டகங்கள்
பெண்களில் ஓரிணைபாதாம்-வடிவ அண்டகங்கள், கீழ் வயிற்றறையில் சிறுநீரகங்களுக்கு அருகில் அமைந்துள்ளன. அண்டகங்கள் பெண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும்.
இதிலிருந்து பெண்பாலின உயிரணு (கரு முட்டை அல்லது அண்டம்) மற்றும் பெண்பாலின ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான்) உற்பத்தி செய்யப்படுகின்றன.
அண்ட செல்லின் அமைப்பு (Structure of ovum):
மனித அண்ட செல்லானது நுண்ணிய, ஓடற்ற, கரு உணவு அற்ற தன்மையுடைய செல் ஆகும்.
இதன் சைட்டோபிளாசம் ‘ஊபிளாசம்’ (Ooplasm) என்று அழைக்கப்படும். இதனுள் காணப்படும் பெரிய உட்கருவிற்கு ‘வளர்ச்சிப்பை’ (Germinal Vesicle) என்று பெயர்.
அண்டசெல் மூன்று உறைகளைக் கொண்டது. மெல்லிய ஒளி ஊடுருவும் ‘விட்டலின் சவ்வு’ (Vitelline membrance) உட்புறத்திலும் தடித்த ‘சோனா பெலூசிடா’ (Zona pellucida) அடுக்கு நடுப்பதியிலும் மற்றும் நுண்பை செல்களால் சூழப்பட்ட தடித்த ‘கரோனா ரேடியேட்டா’ (Corona radiata) உறை வெளிப்புறத்திலும் அமைந்துள்ளன.
விட்டலின் சவ்வுக்கும் சோனாபெலூசிடாவுக்கும் இடையில் ஒரு குறுகிய ‘விட்டலின் புறஇடைவெளி’ (Perivitelline space) காணப்படுகிறது.
மாதவிடாய் சுழற்சி (Menstrual Cycle)
பெண்களின் இனப்பெருக்க காலமான பூப்படைதல்(Puberty/menarche) முதல் மாதவிடாய் நிறைவு (Menopause) வரை கர்ப்பகாலம் நீங்கலாக சுமார்29/28 நாட்களுக்கு ஒரு முறை ‘மாதவிடாய் சுழற்சி’ அல்லது ‘அண்டக சுழற்சி’ நிகழ்கிறது.
மாதவிடாய்சுழற்சி கீழ்காணும் நிலைகளைக் கொண்டது
மாதவிடாய்நிலை
நுண்பைநிலை அல்லது பெருகு நிலை
அண்டசெல் விடுபடு நிலை
லூட்டியல் அல்லது சுரப்பு நிலை
1. மாதவிடாய் நிலை (Menstrual phase)
மாதவிடாய் சுழற்சியானது மாதவிடாய் நிலையில் தொடங்குகிறது.
இந்நிலையில் 5-3 நாட்கள் வரையில் மாதவிடாய் ஒழுக்கு ஏற்படுகிறது .
புரோஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு குறைவதால் கருப்பையின் உட்சுவரான என்டோமெட்ரியம் மற்றும் அதனோடு இணைந்த இரத்தக்குழல்கள் சிதைவடைந்து மாதவிடாய் ஒழுக்கு வெளிப்படுகிறது.
2. நுண்பைநிலை (அல்லது) பெருகு நிலை (Follicular phase or Proliferative phase)
மாதவிடாய் சுழற்சியின் 5 ஆம் நாளில் இருந்து அண்டம் விடுபடும் வரை உள்ளகால கட்டமே நுண்பைநிலை எனப்படும்.
இந்நிலையில் அண்டகத்திலுள்ள முதல்நிலை நுண்பைசெல்கள் முழுமையாக வளர்ச்சியடைந்து முதிர்ந்த கிராஃபியன் நுண்பை செல்களாக மாறுகின்றன. அதே வேளையில் எண்டோமெட்ரியம் பல்கிப் பெருகி தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.
3. அண்ட செல் விடுபடு நிலை (Ovulatory phase)
மாதவிடாய் சுழற்சியின் மைய காலகட்டமான சுமார்14 ஆம் நாளில் LH மற்றும் FSH ஹார்மோன்களின் அளவு உச்சநிலையை அடைகிறது.
இவ்வாறு மாதவிடாய் சுழற்சியின் மைய நாளில் அதிகஅளவில் LH உற்பத்தியாவது ‘LH எழுச்சி’ (LH surge) எனப்படும்.இதனால் முதிர்ந்த கிராஃபியன் நுண்பை உடைந்து அண்டஅணு (இரண்டாம் நிலை அண்டசெல்) அண்டகச் சுவரின் வழியாக வெளியேற்றப்பட்டு வயிற்றுக்குழியை அடைகிறது. இந்நிகழ்ச்சியே ‘அண்டம் விடுபடுதல்’ (Ovulation) எனப்படும்.
4. லூட்டியல் அல்லது சுரப்பு நிலை (Luteal or Secretory phase)
லூட்டியல் நிலையில், எஞ்சியுள்ள கிராஃபியன் நுண்பை ஒரு இடைக்கால நாளமில்லாச் சுரப்பியான ‘கார்பஸ் லூட்டியம்’ (Corpus luteum) என்னும் அமைப்பாக மாறுகிறது
கர்ப்பகாலத்தில் மாதவிடாய் சுழற்சியின் அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டு மாதவிடாயும் நின்றுவிடுகிறது.
கருவுறுதல் நிகழாவிட்டால் கார்பஸ் லூட்டியம் முற்றிலுமாகச் சிதைவுற்று ‘கார்பஸ் அல்பிகன்ஸ்’ (Corpus albicans) எனும் வடுத்திசுவை உருவாக்குகிறது.
மேலும் என்டோமெட்ரிய சிதைவும் தொடங்குவதால் மாதவிடாய் ஏற்படுகிறது. இது அடுத்த மாதவிடாய் சுழற்சியின் தொடக்கமாகும்.